முந்தய பக்கம்

பிரபல நடிகர் பிரதீப் ராவத்தின் உடல் நல்லடக்கம்

5 Aug 2026, 8:45 pm
பிரபல நடிகர் பிரதீப் ராவத்தின் உடல் நல்லடக்கம்
<p><strong>பிரபல நடிகர் பிரதீப் ராவத்தின் உடல் நல்லடக்கம்</strong></p><p>‘கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார்.அவருக்கு வயது 74. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்குமுன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று மாலை பிரதீப் ராவத் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இறுதிச்சடங்குகளுக்குப் பின் புதனன்று பிரதீப் ராவத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. </p>
Share
FacebookXWhatsAppTelegram