பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்
8 Oct 2026, 11:53 pm
<p><strong>பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்</strong></p><p>இந்தி திரையுலகின் பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழனன்று கோவாவில் மாரடைப்பு காரணமாக காலமானார். விஸ்வநாத் படேகர் என்று இயற்பெயர் கொண்ட நானா படேகர், தனது வீட்டில் மயங்கி விழுந்தநிலையில் டோனா பவுலாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு வியாழனன்று காலை 5.20 மணியளவில்கொண்டு செல்லப்பட்டார். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக மார்பக இதய மீட்பு சிகிச்சைஅளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.</p><p>3 முறை தேசிய திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு மகாராஷ்டிரா மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் மராத்தி பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ள நானா படேகர், இந்தியத் திரையுலகில் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். தமிழில் காலா படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களைப் பெற்ற நானா படேகர், திரைத்துறைக்கு வருமுன்ராணுவத்தில் பணியேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
