முந்தய பக்கம்

பாஜகவில் இருந்து விலகிய நடிகர் மூலம் கேரளத்தில் தவெக பிரிவு தொடக்கம்?

yesterday
பாஜகவில் இருந்து விலகிய நடிகர் மூலம் கேரளத்தில் தவெக பிரிவு தொடக்கம்?

பாஜகவில் இருந்து விலகிய நடிகர் மூலம் கேரளத்தில் தவெக பிரிவு தொடக்கம்?

திருவனந்தபுரம்கேரள மாநில பாஜகவின் துணைத் தலைவராக இருப்பவர் தேவன். இவர் கடந்த ஆகஸ்ட் 16 அன்று தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்து பாஜகவிலிருந்து விலகினார். தேவன் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தேவன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேவனுக் கும் தவெக தலைவர்களுக்கும் இடையே ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளன. செப்டம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன், நடிகர் தேவன் சென் னையில் தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந் திப்புக்குப் பிறகே கட்சியில் அவரது பங்கு இறுதி செய்யப்படும் என்றும், தேவனுக்குத் தவெக கட்சியின் கேரளப் பிரிவில் மாநிலத் தலைவராகவோ அல்லது ஒருங்கிணைப்பாளராகவோ பொறுப்பு வழங்கப்படலாம் என் றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைப்பு ரீதியாகவும் தேர் தல் ரீதியாகவும் இயங்கி வரும் தவெக, கேரளத்தில் தனது இருப்பை வலுப் படுத்தத் திட்டமிட்டு, தேவனை கேரள மாநில முகமாக மாற்றுவது குறித்துப்பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram