அஜித்குமாரின் தாயார் காலமானார்: முதல்வர் - திரைக்கலைஞர்கள் இரங்கல்
30 May 2026, 9:35 pm

அஜித்குமாரின் தாயார் காலமானார்: முதல்வர் - திரைக்கலைஞர்கள் இரங்கல்

சென்னை, மே 30 - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை (மே 30) அன்று சென்னையில் காலமானார்.

தெலுங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்ட அஜித்குமார், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு தமிழ்நாட்டிலேயே குடியேறினார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தந்தை பி.எஸ். மணி காலமான நிலையில், தற்போது தாயாரையும் இழந்திருப்பது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சர் இரங்கல் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இரங்கலில், “வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன்” என்று இரங்கல் தெரிவித்தார்.

திரை உலகப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.