முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

28 Dec 2025, 5:05 pm
ராணிப்பேட்டையில் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>ராணிப்பேட்டையில் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாடு</strong></p> <p>ராணிப்பேட்டை, டிச. 28- &nbsp;தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் சனிக்கிழமை (டிச. 27) கால வரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுரு கன், ஸ்ரீதர் தலைமையில் ஆற்காட்டில் நடை பெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. சேகர், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எழில் இளம்வழுதி, துணைத் தலைவர் சரவணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கே.ஆர். பிரபாகரன், மாநிலச் செயலாளர் செ. சரவணன், தொடக்கப்பள்ளி மாநிலத் தலைவர் மா. தேவராஜன், தொ.ப.ஆ. மன்றம் யோசுவா, பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆதவன், சத்துணவு மாநிலத் தலைவர் கீதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram