சாலையோர ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை
6 Jul 2026, 1:18 am
<p><strong>சாலையோர ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை</strong></p><p>உதகை, ஜூலை 5- நீலகிரி மாவட்டத்தில் சாலை யோரம் வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் தெரி வித்தார். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள நெடுஞ்சாலைத்துறை அலு வலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நுகர்வோர் காலாண்டு கூட் டம் சனியன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன் தலைமை வகித்தார். இதில், நீலகிரி மாவட்டத்தில் சாலை யோரங்களில் வளர்ந்துள்ள ஆபத் தான மரங்கள், செடி, கொடிகளை அகற்ற வேண்டும். நாடுகானி - தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டும். பந்தலூர் - முக்கட்டி சாலை மற்றும் இலியாஸ் கடை - கொளப்பள்ளி சாலை அகலப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். கோத்தகிரியில் மழைநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும். நிழற்குடை அமைக்க இடம் ஒதுக்கி தர வேண் டும். சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். குன்னூர் ரயில் நிலையம் பகுதி யிலுள்ள நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பகுதியை அகலப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். கூட லூர் – உதகை சாலைகளை அகலப் படுத்தி, முட்செடிகளை அகற்ற வேண்டும் என நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தி னர். இதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் முருகன், வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, சாலைகள் அருகே உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலி கமாக சாலைகள், சிமெண்ட் கான் கிரீட் மூலம் அகலப்படுத்தி தர நடவ டிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களை ஆய்வு செய்து தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும். மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்புகள் தூர்வார ஆய்வு செய்யப்படும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் அங் கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளான கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணி யம், கோத்தகிரி நுகர்வோர் பாது காப்பு சங்க தலைவர் நாகேந்திரன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை, கோத்த கிரி புழுமவுண்டன் நுகர்வோர் பாது காப்பு சங்க தலைவர் வாசுதேவன், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
