தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

8 Apr 2026, 5:30 am
அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப். 7- கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தருமபுரி மாவட்ட பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.என்.பி.எஸ்.செந்தில்குமார், தொகுதி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டிஅள்ளி, ஜோதிஅள்ளி, பி.கொல்லஅள்ளி, உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய வேட்பாளர் செந்தில்குமார், சாலை, குடிநீர், மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைப்பதாக பெண்கள் முன்வைத்தனர். இதை பெற்று அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வின் போது, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.என்.பி.தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட அவைத் தலைவர் பி.ஏ.முருகன், ஒன்றியச் செயலாளர் முனிராஜ், பி.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.