தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதிய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை

22 Dec 2025, 2:53 pm
சாதிய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை
<p><strong>சாதிய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை&nbsp;&nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை</strong></p> <p>தூத்துக்குடி, டிச.22- தமிழகத்தின் தென் மாவட்டங்க ளில் &nbsp;தொடரும் சாதிய படுகொலைக ளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.காசி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்க ளில் தொடர்ச்சியாக சாதிய &nbsp;படு கொலைகள் என்பது ஆதிக்க சமூ கத்தினர் அரங்கேற்றி வருகிறார்கள். கடந்து 2023 &nbsp;டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நெல்லையில் பெட்ரோல் பங்க் முன்பு தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளை ஞர் முருகப்பெருமாள் என்பவரை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் வெட்டி &nbsp;படுகொலை செய்தனர் அதிலிருந்து &nbsp;நான்கு &nbsp;மாதங்கள் கடந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் &nbsp;கீழ புதுக்கு டியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த காளிமுத்து என்ற 45 வயது கூலி தொழிலாளி வெட்டி படு கொலை &nbsp;செய்யப்பட்டார் .இப்படி இந்த பகுதியில் பட்டியல் சமூக மக்க ளை அச்சத்தில் இருக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் இது மாதிரி வன்கொடுமைகளை அடுத்தடுத்து நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடந்து முடிந்து ஓரிரு மாதங்களி லேயே இப்படிப்பட்ட கொடூர செயலை செய்து பிறபகுதிகளில் வாழும் மக்கள் அச்ச உணர்வோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஆண்டு(2025) தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகமங்கலம் கவின் செல்வகணேஷ் &nbsp;என்கிற மென் பொறியாளரை ஆதிக்க சமூ கத்தினர் வெட்டி படுகொலை செய்த னர். அந்த கொடூர செயல் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதி களில் பேசப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதி மக்களின் மனதை விட்டு அகல்வதற்கு முன்பே சாத்தான் குளம் காந்திநகர் பகுதியில் உள்ள இளைஞர் சுடலைமுத்து 19 12 2025 பட்டப் பகலில் தனது மனைவி மற்றும் உறவினர்கள் &nbsp;கண்முன்னே விரட்டி விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். &nbsp; &nbsp; &nbsp;இப்படி இந்தப் பகுதி மக்கள் எல்லா காலங்களிலும் அச்ச உணர்வோடு வாழ வேண்டும் என்று நோக்கோடு ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் இது மாதிரியான ஆணவ படுகொலைகளையும் சாதி &nbsp;வெறி படுகொலைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். இது போன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனிதநேய ஆர்வலர்கள் போன்ற அமைப்புகள் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய உரிமைகள் அனைத்தையும் பெற்று கொடுக்கிறார்கள். அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த காலங்களில் ஏற்படும் பதட்டத்தை சரி செய்ய நிவாரணங்களை வழங்கி தற்காலிகமாக பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மேம்படுத்துகிற வகை யில் இரண்டு ஏக்கர் விளை நில மோ அதேபோல் வீடு கட்டி கொடுப்ப தோ உரிய அரசு வேலை வழங்கு தோ இல்லை. மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு கொடுக்கும் அரசு வேலை என்பது அங்கன்வாடியில் சமையலர் பணிதான். உண்மையாக வே அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு உரிய அரசு பணி வழங்க வேண்டும் வீடும் நிலமும் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடர்ச்சியாக ஆதிக்க சமூகத்தை சார்ந்தவர்கள் பட்டியல் சமூகத்தை சார்ந்த இளை ஞர்களையும் மாணவர்களையும் வெட்டுவதும் அடித்து துன்புறுத்து வதும் நடந்தேறிக் கொண்டிருக்கி றது. அதை தடுக்கும் வகையில் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பது தான் எதா ர்த்தமான உண்மை &nbsp;நிலையாக உள்ளது. ஒரு பிரச்சனை தொடர்ச்சி யாக நடைபெற்றுக் கொண்டிருக்கி றது. அந்த பிரச்சனைக்கு முடிவு என்ன என்பதை அரசும் மாவட்ட நிர்வாகமும் அதற்கான பணியை சரியாக செய்யாதவரை இது மாதிரி யான தொடர் சாதிய படுகொலைகள் ,ஆணவப் படுகொலைகள் என்பது நடந்து கொண்டு தான் இருக்கும். &nbsp;ஆகவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி இது போன்ற வன்கொடுமை சம்பவகங்கள் நடக்காத வகையிலும் இப்பகுதி மக்கள் மத்தியில் அச்ச உணர்வை போக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.