இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர நடவடிக்கை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் பழனியப்பன் உறுதி
5 Apr 2026, 5:18 pm
<p><strong>இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர நடவடிக்கை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் பழனியப்பன் உறுதி</strong></p>
<p>தருமபுரி, ஏப்.5- அரசு வீடு மற்றும் இல வச வீட்டுமனை பட்டா பெற் றுத்தர நடவடிக்கை எடுக் கப்படும் என வாக்குசேக ரிப்பின்போது, பாப்பிரெட் டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் உறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் பி.பழனியப்பன், கிரா மம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறார். செட்டிக்கரை கிராமத்தில் துவங்கிய பிரச்சாரம் நூல அள்ளி, என். எஸ். ரெட்டியூர்,உங்குரான அள்ளி, கோடு அள்ளி, வே. முத்தம்பட்டி, கொண்டகர அள்ளி, திப்பி ரெட்டி அள்ளி, ஆகிய கிராமங்களில் பிரச்சா ரம் மேற்கொண்டார். அப்போது, மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 பெற்றிடவும், தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1500 பெற்றிடவும் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். மேலும், கிராமங்களுக்கு அடிப்படை வசதி, நூறு நாள் வேலை, அரசு வீடு, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார். இப்பிரச்சாரத்தில், விசிக மாவட்டச் செய லாளர் சென்னகிருஷ்ணன், திமுக மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், திமுக ஒன்றி யச் செயலாளர்கள் கே.பி.சக்திவேல், மாது, பிரபு ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.ஆர்.சிவகுரு, பொறியா ளர் அணி அமைப்பாளர் வெற்றி, நெசவா ளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் காளி, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
