வேலைநிறுத்தம் செய்ததாக கூறி நடவடிக்கை 49,722 ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்!
25 Nov 2025, 3:29 pm
<p><strong>வேலைநிறுத்தம் செய்ததாக கூறி நடவடிக்கை 49,722 ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்!</strong></p>
<p>சென்னை, நவ. 25 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் கடந்த நவம்பர் 18 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் 29,755 பேரும், பள்ளிக் கல்வித் துறையில் 19,967 பேரும் என மொத்தம் 49,722 ஆசிரியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலா ளர் முருகானந்தம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோ பர் 16 அன்று 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அதன் பிறகும் கோரிக்கை கள் நிறைவேற்றப்படாததால் நவம்பர் 18 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p>
