தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

8 Apr 2026, 5:30 am
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை, ஏப். 7 - அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடிதம். விஸ்வநாத் அர்லேகர், பாஜக மற்றும் அதன் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாகப் பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பைச் சார்ந்த நபர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலில் உள்ள நிலையில், அவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். ராஜகோபால் (பாஜக), எஸ்.ஜி. சூர்யா (பாஜக), மாருதி (ஆர்.எஸ்.எஸ்), மு. நாச்சியப்பன் (ஆர்.எஸ்.எஸ்), வழக்கறிஞர் சுபாஷ் பாபு (ஏ.பி.வி.பி), தர்மயுத்த ஆச்சார்யா சுவாமி (ஆர்.எஸ்.எஸ்) உள்ளிட்ட பலரைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பு. மேலும், திங்களன்று (ஏப். 6, 2026) கோயம்புத்தூர் செல்லும் ஆளுநர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திராவினால் நிர்வகிக்கப்படும் விவேகானந்தர் ரத்த வங்கி நிகழ்ச்சி, காலை 11:45 மணிக்கு இராமநாதபுரத்தில் உள்ள ஆர்யா வைத்யா பார்மசியில் நடைபெறும் 'காரியகர்த்தாக்கள்' சந்திப்பு மற்றும் மாலை 4:00 மணிக்கு 'சிக்சா சமிதிக்கு உத்தன் நியாஸ்' (SSU) பேராசிரியர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. மாநிலத்தின் அரசியல் சாசனத் தலைவராக இருப்பவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பு அமைப்புடன் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விழுமியங்களுக்கும், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் முறைக்கும் எதிரானது என்று நாங்கள் கவலை தெரிவிக்கிறோம்.

ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்க! எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தகுந்த அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்க வேண்டும் என்று கோருகிறோம். தேர்தல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.