தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிர்சா முண்டாவை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை! மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

15 Nov 2025, 4:09 pm
பிர்சா முண்டாவை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை! மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>பிர்சா முண்டாவை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை! மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், நவ.15- பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், சுதந்திரப் போராட்ட வீரரு மான பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த &nbsp;நாளையொட்டி (நவ.15), நாடு முழுவதும் &quot;ஜன்ஜா தியா கௌரவ் திவாஸ்&quot; 2025 கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பழங்குடியினர் மக்கள் வசிக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 15 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, பழங்குடி மக்கள் நலம், பி.எம். ஜென்மன் திட்டத்தில் தொகுப்பு வீடு கள் கட்டுவது குறித்தும், பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டத் &nbsp;தில் உள்ள 14 ஒன்றியங்க ளில் 213 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங் கள் நடத்த மாவட்ட ஆட்சி யர் மு.பிரதாப் உத்தர விட்டிருந்தார். ஆனால், வெள்ளியன்று (நவ.15) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டா விற்கு மலர் அஞ்சலி செலுத்தாமல் அவமதிக்கப் பட்டுள்ள தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் கடம்பத்தூர் ஒன்றி யம் வயலூர், சோழவரம் ஒன்றியம் பூதூர், பூண்டி ஒன்றியம் மெய்யூர், குன்ன வளம் போன்ற ஊராட்சி களிலும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெறவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில், &quot;பழங்குடி மக்களின் போராளி பகவான் பிர்சா முண்டாவிற்கு உரிய மரி யாதை செலுத்தாமல் இந்த நிகழ்ச்சி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியா கத்தை போற்றாமலும், அடுத்த தலைமுறைக்கு இந்தச் செய்தியைத் தெரி விக்காமல் புறம் தள்ளிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்&quot; என வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.