அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சிக்கு நடவடிக்கை
12 Jun 2026, 5:30 am

அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சிக்கு நடவடிக்கை

சென்னை, பிப். 24: அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

மேலும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.