தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் ஆதாரம், சிசிடிவி அடிப்படையில் நடவடிக்கை விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி வன்கொலையில் ஒருவர் கைது!

19 Mar 2026, 3:18 pm
அறிவியல் ஆதாரம், சிசிடிவி அடிப்படையில் நடவடிக்கை விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி  வன்கொலையில் ஒருவர் கைது!
<p><strong>அறிவியல் ஆதாரம், சிசிடிவி அடிப்படையில் நடவடிக்கை விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி &nbsp;வன்கொலையில் ஒருவர் கைது!</strong></p> <p>தூத்துக்குடி, மார்ச் 19 - தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 17 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப் பட்டது தொடர்பான வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதுச் சிறுமி. பிளஸ் 2 படித்து வந்த இவர், கடந்த மார்ச் 10 அன்று இரவு வேளை யில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்ற நிலையில், மறுபடியும் வீடு திரும்ப வில்லை. &nbsp;பல இடங்களில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், மார்ச் 11 அன்று அதே காட்டுப் பகுதியில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது &nbsp;பாதிக்கப்பட்ட மாணவியின் உற வினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட &nbsp;குற்றவாளிகளை கைது செய்ய வலி யுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற வாளிகளைத் தேடி வந்தனர். கிராமம் முழுவதும் வீடு வீடாக விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் 5 &nbsp;பேருக்கு டிஎன்ஏ மருத்துவப் பரிசோத னையும் மேற்கொண்டனர். காவல் &nbsp;துணை கண்காணிப்பாளர் சுந்தர பாண்டியன் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், வேடநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதி யில் ஒரு இருசக்கர வாகனம் கடந்து சென்றதையும், அந்த வாகனத்தின் எண்ணை ஆய்வு செய்ததில், இராம நாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்ட வாகனம் என்பதும் தெரிய வந்தது. &nbsp;இதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் ஆய்வு மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலி பரை காவல்துறையினர் கைது செய்தனர். &nbsp;தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் இரண்டு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.