தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
8 Apr 2026, 5:30 am

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை, ஏப். 7 - அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுபீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் நகலை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, திங்களன்று நேரில் சந்தித்து அளித்தார்.

அந்தக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மற்றும் அதன் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாகப் பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பைச் சார்ந்த நபர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருவதாக நாங்கள் அறிகிறோம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவர் பல்வேறு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

மாநிலத்தின் அரசியல் சாசனத் தலைவராக இருப்பவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பு அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விழுமியங்களுக்கும், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் முறைக்கும் எதிரானது என்று நாங்கள் கவலை தெரிவிக்கிறோம்.