ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி மீது நடவடிக்கையா? உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!
10 Dec 2025, 4:08 pm
<p><strong>ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி மீது நடவடிக்கையா? உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!</strong></p>
<p>திருநெல்வேலி, டிச. 10 - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஒருங்கி ணைப்பாளரும் இந்திய மாணவர் சங்கர் நெல்லை மாவட்ட செயலாள ருமான சைலஸ் அருள்ராஜ், துணை ஒருங்கிணைப்பாளர்களான - இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ராம்குமார், தென்காசி மாவட்டச் செயலாளர் மதன்குமார், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சந்துரு ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறி யிருப்பதாவது: “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்த பட்டமளிப்பு விழா வில் நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி மேடை யில் இருந்த ஆளுநர் கைகளால் முனைவர் பட்டம் பெற மறுப்பு தெரி வித்தோடு, அருகில் இருந்த துணை வேந்தர் மூலம் பட்டம் பெற்றிருந் தார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி அமைப்பை சார்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் முனை வர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டு மென பல்கலைக்கழக நிர்வாகத்தி னரிடம் புகார் அளித்திருந்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் ஆர்எஸ்எஸ் சார்பு நபர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில், ஆளுநரை மாணவி அவமரியாதை செய்திருக்கிறார் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வழி உள்ளதா? என்று பதிலளிக்குமாறு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. இது மாதிரியான நிகழ்வுகள் இனி நடக்கா மல் இருக்க மாணவர்களுக்கான வழி காட்டு நெறிமுறைகளை வகுக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். உயர் நீதிமன்ற அமர்வின் இந்த உத்தரவும், கருத்துக்களும் அரசியல மைப்புச் சட்டம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதி ரானதாகும். ஆளுநரின் நடவடிக்கை கள் குறித்து மாணவி தெரிவித்த கருத்துக்கள் என்பது அவதூறோ, அவமரியாதையோ அல்ல. எனவே, மாணவியின் கருத்துச் சுதந்திரத்துக்கு விரோதமாக தொடுக் கப்பட்டுள்ள இந்த வழக்கில், தமிழ்நாடு அரசும் ஒருதரப்பாக இணைத்துக்கொண்டு கருத்துரி மையை பாதுகாக்க உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
