மதுக்கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
25 May 2026, 1:35 am
<p><strong>மதுக்கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை</strong></p><p>கோவை, மே 24- தமிழ்நாட்டில் மதுபானக் கடைக ளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில் லறை விற்பனை விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் கட்டணம் வசூலித் தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரி வித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், மது பானக் கடைகளில் ஊழியர்கள் மின் சாரக் கட்டணம் அல்லது இதர கையாளு தல் செலவுகளை காரணம் காட்டி, மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாகப் பணம் வாங்குவதாக புகார்கள் வருகின்றன. இதைத்தடுக்க, கடைகளின் செயல் பாட்டு பில்களை மத்தியமயமாக்கி அரசே நேரடியாக நிர்வகிக்க நடவ டிக்கை எடுத்து வருகிறது. எக்கார ணம் கொண்டும் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட தரத் தேவையில்லை. காலி மதுபாட்டில் களை திரும்பப்பெறும் திட்டத்தை எளிமையாக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தேர்தல் வாக் குறுதி மற்றும் அரசின் கொள்கை முடிவின்படி, முதற்கட்டமாக மூட திட்ட மிடப்பட்ட 717 கடைகளில், இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப் பட்டுள்ளன. அந்த கடைகளில் பணியாற் றிய 2,290 ஊழியர்களுக்கும் மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு, அவர்களின் மாதச் சம்பளம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. சூலூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் தொடர்பு டைய இருவர் உடனடியாக கைது செய் யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல்துறை மற்றும் சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தில் மிக வலுவான வாதங்கள் முன்வைக்கப்ப டும், என்றார்.</p>
