தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
8 Apr 2026, 5:30 am

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடிதம் சென்னை, ஏப். 7 - அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஆணையர்கள் ராஜீவ் குமார், அனூப் சந்திர பாண்டே ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் நகல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, திங்களன்று நேரில் சந்தித்து அளித்தார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஆர்எஸ்எஸ்-காரர்களை சந்தித்து வரும் ஆளுநர் 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தையும் சட்டத்தையும் பாதுகாப்பேன்' என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு ஆளுநர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவது தமிழகத்தில் தேர்தல் நடைமுறையைச் சிதைக்கும் செயலாக அமையும்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் அவர் ஆதரவளிக்கிறார் என்ற பிம்பத்தை இச்சந்திப்புகள் உருவாக்குகின்றன. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்க! எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தகுந்த அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

தேர்தல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.