தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சொந்தக் கார்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

8 Jun 2026, 9:42 pm
சொந்தக் கார்களை வாடகைக்கு விடுவோர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சொந்தக் கார்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிஐடியு வலியுறுத்தல்

சிஐடியு வலியுறுத்தல் விருதுநகர், ஜூன் 8- விருதுநகர் மாவட்டத்தில் சொந்தப் பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்ட கார்களை சட்டவிரோதமாக வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், சாத் தூர் டூரிஸ்ட் கார் மற்றும் வேன் சங்கத் தலை வர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் தனுஷ் கோடி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது: சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் 500-க்கும் மேற்பட்டோர் டூரிஸ்ட் கார் மற்றும் வாடகை வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி சுமார் 1,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றன. வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் வாகன தகுதிச் சான்று, காப்பீடு, ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சொந்தப் பயன் பாட்டிற்காக பதிவு செய்யப்பட்ட கார்களை சிலர் சட்ட விதிமுறைகளை மீறி குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு இயக்கி வரு வதால், வாடிக்கையாளர்கள் அவற்றையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சட்டப்பூர்வமாக வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்தப் பயன்பாட்டு வாக னங்களை வணிக ரீதியாக இயக்குவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, வாடகை வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.