தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுறவு நூற்பாலை முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை

11 Jun 2026, 9:16 pm
கூட்டுறவு நூற்பாலை முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை

கூட்டுறவு நூற்பாலை முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை

சிஐடியு தலைவர்களிடம் அமைச்சர் உறுதி!

சென்னை, ஜூன் 11 - தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு நூற்பாலைகளைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் (சிஐ டியு) மற்றும் கூட்டுறவு நூற்பாலை களின் தலைவர்கள் அடங்கிய தூதுக் குழுவினர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரை சென்னையில் ஜூன் 9 அன்று நேரில் சந்தித்துப் பேசினர். மதியம் 12.30 மணிக்குத் தொடங்கிய இச்சந்திப் பில் சிஐடியு சம்மேளனத் தலை வர்கள் எம்.அசோகன், எஸ்.சக்தி வேல், சி.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.தனபால், ஜி.ராமர் மற்றும் ஏ.லட்சுமணதாஸ் ஆகியோர் பங்கேற்று, 9 அம்சக் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தொழிலாளர் வாழ்வாதாரக் கோரிக்கைகள்

கூட்டுறவு நூற்பாலைகளை எவ்விதத் தொய்வுமின்றி முழுமை யாக இயக்குவதுடன், தொழிலாளர் களுக்கு குறைந்தபட்சக் கூலி கிடைப் பதை அரசு உறுதி செய்ய வேண் டும். இ.எஸ்.ஐ காப்பீடு இல்லாத தொழிலாளர்களுக்குத் தனி மருத்து வக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண்டும் மற்றும் கடந்த ஜனவரி 2026 முதல் வழங்கப்பட வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கன்யாஸ்பின், எட்டய புரம் மற்றும் அண்ணா கூட்டுறவு நூற் பாலைகளில் உள்ள தொழிலாளர் களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிய தலைவர்கள், ‘ஜாப் ஒர்க்’ என்ற பெயரில் கூட்டுறவு ஆலை வேலைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை முற்றிலும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட னர்.

ரூ.26 லட்சம் முறைகேடு அம்பலம்

தொடர்ந்து, அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் தணிக்கை அறிக் கையைச் சுட்டிக்காட்டிய சம்மேள னத் தலைவர்கள், அங்கு நடை பெற்ற ரூ.26 லட்சம் நிதி முறை கேட்டையும், ஒரு மில்லிலேயே கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதையும் ஆதாரங் களுடன் அமைச்சரிடம் விளக்கிப் புகாராக அளித்தனர்.

அமைச்சர் உறுதிமொழி

இப்புகார்களைச் செவிமடுத்த அமைச்சர், நிர்வாகச் சீர்கேடுகளைக் களையத் தற்போது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகத் தெரிவித்தார். அண்ணா மில் மற்றும் கன்யாஸ்பின் ஆலையில் ‘ஜாப் ஒர்க்’ முறை முற்றிலும் கைவிடப்படும் என்றும், பஞ்சு கொள்முதல் இனி ‘சிசிஐ’ (CCI) மூலமாக மட்டுமே வெளிப் படையாக நடக்கும் என்றும் உறுதி யளித்தார். மேலும், முறைகேடு களுக்குக் காரணமான கயவர்கள் எவரும் இந்தத் துறையில் நீடிக்க முடியாது என அமைச்சர் உறுதி யளித்ததால், சிஐடியு சம்மேளனத் தலைவர்கள் நம்பிக்கையுடன் ஏற்ற னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.