தேக்கடி ஏரியில் கழிவுநீர் 16 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
4 Jul 2026, 10:36 pm
<p><strong>தேக்கடி ஏரியில் கழிவுநீர் 16 நிறுவனங்கள் மீது நடவடிக்கை</strong></p><p>தேனி, ஜூலை 4- தேக்கடி ஏரிக்குச் செல்லும் நீர்நிலைகளில் ரகசியக் குழாய்கள் மூலம் சமையலறை மற்றும் கழிப்ப றைக் கழிவுகளை வெளியேற்றிய 16 வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற தேக்கடி ஏரியின் நீர்நிலை களில், குமுளி பகுதியிலுள்ள சில நிறுவனங்கள் ரகசியமாக குழாய் களைப் பதித்து கழிவுநீரை ஓடை களிலும் சாக்கடைகளிலும் கலந்து வந்தன. ஊராட்சி நிர்வாகம் மேற் கொண்ட திடீர் சோதனையில் இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து, கழிவுநீர் வெளி யேற்றப் பயன்படுத்தப்பட்ட ரகசியக் குழாய்கள் அனைத்தும் கற்கள் மற்றும் சிமெண்ட் கொண்டு உடனடியாக அடைக்கப்பட்டு, ஓட்டங்கள் துண்டிக்கப்பட்டன. முன்னதாக, இந்த சட்டவிரோதக் குழாய்களை அகற்றக் கோரி கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் கள் அதனைக் கண்டுகொள்ள வில்லை. விதிமீறல் தொடர்ந்ததை அடுத்து, ஊராட்சித் தலைவர் எம்.எம். வர்கீஸ் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆர். அசோக் குமார் ஆகியோரின் நேரடித் தலைமை யில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட நிறு வனங்களுக்குக் கடுமையான அப ராதம் விதிக்கப்படும் என்றும், வரும் நாட்களிலும் கொல்லம் பாலம் முதல் போஸ்ட் ஆபீஸ் சந்திப்பு வரை தேசிய நெடுஞ் சாலை சாக்கடைகளின் மேல் மூடப்பட்டுள்ள ஸ்லாபுகளை அகற்றி தீவிர சோதனை நடத்தப்படும் என்றும் ஊராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமுளியில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து ஆனவாச்சல் ஓடையில் கழிவுகள் கலப்பது குறித்து பெரி யாறு புலிகள் காப்பகத் துணை இயக்குநரும், முல்லைப் பெரியாறு அணைப் பொறுப்பிலுள்ள தமி ழக பொதுப்பணித்துறை அதிகாரி களும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.</p>
