தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்எல்சி இந்தியா நவரத்தினத்தின் சாதனைகளும் சவால்களும் - பாலன்

7 Dec 2025, 3:52 pm
என்எல்சி இந்தியா நவரத்தினத்தின் சாதனைகளும் சவால்களும் -  பாலன்

என்எல்சி இந்தியா நவரத்தினத்தின் சாதனைகளும் சவால்களும்

ஒன்றிய அரசின் ‘நவரத்தின’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL), இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் மிக முக்கியத் தூணாக  விளங்குகிறது. கடலூர் மாவட்டத்தின் (முன்னாள் தென்னார்க்காடு) நெய்வேலிப் பகுதியில் கண்ட றியப்பட்ட பிரம்மாண்டமான பழுப்பு நிலக்கரிப் படிவுகளே இந்நிறுவனத்தின் தோற்றத்திற்குக் காரணமாகும். 1956-ஆம் ஆண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட என்எல்சி, இந்தியாவில் பழுப்பு நிலக்கரியை வணிக ரீதியாகப் பயன்படுத்திய முதல் நிறுவனம் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றது.

இந்த நிறுவனம் உருவாவதற்குப் பின்னால் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெரும் பங்கு இருந்தது.  தமிழக சட்டமன்றத்தில் மகத்தான தலைவர் தோழர் பி. ராமமூர்த்தி மற்றும் மக்களவையில் தோழர்  அனந்த நம்பியார் ஆகியோர் நெய்வேலி பழுப்பு  நிலக்கரியைப் பயன்படுத்தித் தொழில் வளர்ச்சியை உருவாக்க செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள், கிழக்கு ஜெர்மனியில் பழுப்பு  நிலக்கரி கொண்டு இரும்பு உருக்குவதைக் கண்ட றிந்தது, நெய்வேலித் திட்டத்திற்கு அடிப்படையான யோசனையாக அமைந்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தொழில்நுட்ப உதவி வழங்க மறுத்த நிலையில், சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் 1963-ல் முதல் அனல் மின் நிலையம் (தெர்மல்-I) தொடங்கப்பட்டது. 1962-ல் மின்சாரம் தயாரிக்க தெர்மல் - I உருவானது. இது 2020-ல் அதன் உற்பத்திக்  காலம் முடிவடைந்ததால் மூடப்பட்டது. இது சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்ட ஒரு முக்கியமான நகர்வாகும்.

நிகழ்காலச் சாதனைகளும் பொருளாதாரப் பங்களிப்பும் என்எல்சி இன்று நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சோலார் மற்றும் காற்றாலை சார்ந்த மின் உற்பத்தி யில் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனம் நெய்வேலி, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற இடங்களில் 9 சுரங்கங்கள் மூலமாக நிலக்கரி/பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்கிறது. மேலும், நெய்வேலி, தூத்துக்குடி ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உட்பட 7 அனல் மின் நிலையங்கள் மூலம் தினசரி 6730 மெகாவாட் (MW) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. சோலார் மற்றும் காற்றாலை மூலம்  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியிலும் ஈடுபட்டுள் ளது. அத்துடன், என்எல்சி பசுமை எரிசக்தி லிமிடெட் (NLC Green Energy Limited) மற்றும் என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட் (NLC  India Renewable Limited – NIRL) மூலம் குஜராத்தில் 1200 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

2024-2025 நிதியாண்டிற்கான மொத்த லாபம் ₹10,861.41 கோடி ; மற்றும் நிகர லாபம் ₹2,713.61 கோடி ஆகும். இந்த நிதி வலிமையின் காரணமாக, நிறுவனம் தனது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் 2% என்ற சட்டப்பூர்வக் கடமையின் அடிப் படையில், ₹48.63 கோடியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கை களுக்காக ஒதுக்கி செலவிடுகிறது.

சமூக-தொழிலாளர் சவால்கள்: லாபத்தின் மறைந்த நிழல் ஒரு நவரத்தின நிறுவனமாக என்எல்சி அளப்பரிய சாதனைகள் புரிந்தாலும், அதன் செயல்பாடுகளில் உள்ள சவால்களும், சமூகப் பொறுப்புகளும் புறக்கணிக்க முடியாதவை.

காலியிடங்கள் மற்றும் பணியாளர் கொள்கை: மின் மற்றும் நிலக்கரி உற்பத்திக்கு, நிறுவனத்தின் சொந்த மனித உழைப்பு அளவீட்டின்படி, சுமார்  17,688 நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்ற னர். இருப்பினும், தற்போது நிரந்தரப் பணியில் சுமார் 10,364 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், பெருமள விலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நிரந்தரப் பணியாளர் தேர்வு கொள்கைகளில், குறிப்பாகப் பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக் கணிக்கப்படுவதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத் தொழிலாளர் மீதான உழைப்புச் சுரண்டல்:  ஹவுசிகோஸ், இன்கோசர்வ், சொசைட்டி, காண்ட்ராக்ட் போன்ற பல்வேறு பெயர்களில் பணிபுரி யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதி யத்தைக்கூட மறுத்துச் சுரண்டப்படும் நிலை உள்ளது. நிறுவனத்தின் நிலைத்த வளர்ச்சிக்கு, இத்தகைய காலியிடங்களை நிரந்தரப் பணியாளர்கள் கொண்டு பூர்த்தி செய்வது, மூலதனக் கோட்பாட்டின் (Capital Theory) படி தொழிலாளரின் அனுபவம் மற்றும் திறமைகளை மூலதனமாகக் கருதுவது அவசியம். நிலம் வழங்கிய மக்களின் போராட்டம் : நிறுவனம் 1956 முதல் சுமார் 37,256 ஏக்கர் நிலத்தை 25,000 குடும்பங்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலம் வழங்கிய கிராம  மக்கள் நியாயமான இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் (Rehabilitation and Resettlement – R & R) கொள்கையை முழுமையாக அமல்படுத்து தல் ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். தொழிலாளர் நலனில் தொழிற்சங்கத்தின் அர்ப்பணிப்பு செப்டம்பர் 9, 1953 அன்று தொடங்கப்பட்ட லிக்னைட் மைன்ஸ் லேபர் யூனியன் (LMLU) தொழிற் சங்கம் (பின்னர் சிஐடியு-வுடன் இணைந்தது), தொழி லாளர்களின் நலன் மற்றும் நிறுவன உற்பத்தித் திறன் இரண்டையும் பேணி வருகிறது. ஆரம்பத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தின் செயல்திறனைக் கூட்ட சிஐடியு அளித்த ஆக்கபூர்வமான ஆலோசனை மற்றும் அழுத்தங்கள், என்எல்சி லாபத்தில் இயங்க உதவியது. 1989-ல் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, 1995 முதல் படிப்படியாக சுமார் 5,000  ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியாளர் களாக மாற்றப்பட்டனர்.

மேலும், 2014 ஆம்  ஆண்டின் 52 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலம் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வீட்டு ஒதுக்கீடு, பணிக்கொடை, விடுப்பு போன்ற பலன்கள் பெறப் பட்டன. சிஐடியு தொடர்ந்து நிரந்தரமாக்கல் மற்றும் நியாயமான ஊதியத்திற்கான போராட்டங்களை நடத்துகிறது. சுற்றுச்சூழல் மற்றும் எதிர்காலப் பார்வை பழுப்பு நிலக்கரி எரித்தல் மூலம் ஏற்படும் கார்பன் டை-ஆக்ஸைடு (CO2), சாம்பல் மற்றும்  கந்தக டை-ஆக்ஸைடு (SO2) வெளியீடு சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது. இருப்பினும், நிறுவனம் சோலார் மற்றும் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி யதன் பின்னணியில், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக் கான தீர்வாக அதை முன்வைக்கிறது.

சாம்பலைக் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்துவது, நீர் சுத்தி கரிப்புத் திட்டங்கள் போன்ற “பசுமை முயற்சிகள்” எதிர்காலத் திட்டங்களுக்கான அவசியமான முன்னுரி மையாகும். மேலும், நிறுவனத்தின் பெயர் 2016-இல்  மாற்றப்பட்டதன் விளைவாக, அதன் சேமிப்பை மத்திய ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டது என்பது, ஒரு பொருளாதாரப் பின்னடைவாகும். நாட்டின் மின் தேவையை நிறைவேற்றும் இந்த நிறுவனம், அதன் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய முப்பிரிவுச் சவால்களையும் சமாதானமாகச் சமாளிக்க வேண்டும். ஒரு நவரத்தின நிறுவனத்தின் வெற்றி, அதன் நிதி லாபத்தால் மட்டுமல்ல, அதன்  சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையால் அளவிடப்பட வேண்டும். அனைவரின் வளர்ச்சிக்கும் இந்நிறுவனம் ஒரு ‘உண்மையான நவரத்னமாக’ என்எல்சி விளங்குவதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.