தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

6 Mar 2026, 3:17 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரயில் போக்குவரத்து மாற்றம்

கோவை, மார்ச் 6- ஈரோடு – கரூர் ரயில்வே பிரிவில் உள்ள கொடு முடி ரயில் நிலைய யார்டு பகுதியில் நடைபெறவுள்ள அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும்  மார்ச் 9-ஆம் தேதி கோவை மற்றும் ஈரோடு மார்க்க மாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகளில் மாற் றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மாரிய மைக்கேல் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சிராப்பள்ளியிலிருந்து மதியம் 13.00 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக கேரளா செல்லும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ் பிரஸ் (16843), மார்ச் 9 அன்று கரூர் ரயில் நிலையத்து டன் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் கரூரிலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், செங்கோட்டையிலிருந்து ஈரோடு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூருடன் நிறுத்தப் படும். பின்னர் இது கரூரிலிருந்து ஈரோட்டிற்கு சிறப்பு  ரயிலாக இயக்கப்படும். மறுமார்க்கமாக, ஈரோட்டிலி ருந்து மதியம் 14.00 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16845), அன்று ஈரோட்டிற்குப் பதிலாக கரூரிலிருந்து மதியம் 15.05 மணிக்கு புறப்படும். மேலும், திருச்சி – ஈரோடு பயணி கள் ரயில் (56809) கரூருடன் நிறுத்தப்படும் என்பதால் ஈரோடு மற்றும் கோவை மார்க்கமாகச் செல்லும் பயணி கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி தொடக்கம்

கோவை, மார்ச் 6- கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண் காட்சி வெள்ளியன்று தொடங்கியது. ஜவுளித் துறை யின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இக்கண்காட்சியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது நவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி யுள்ளன. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சி யில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பல்வேறு யூனியன் பிர தேசங்களில் இருந்தும் 240-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய நிறுவனங்கள் மட்டு மின்றி சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான்  மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த முன்னணி ஜவுளி இயந்திர உற்பத்தி நிறுவனங்களும் இதில்  கலந்துகொண்டுள்ளன. மொத்தம் 258 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஜவுளி உற்பத்திக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜவுளித்துறை சார்ந்த தொழிலதிபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என  சுமார் ஒரு லட்சம் பேர் இக்கண்காட்சியை பார்வையிடு வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு, மார்ச் 6- சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத் தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கெஞ்சனூர் அம்மன் கோவில் பிரிவை சேர்ந்த பேரரசு (19), அதேபகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான ராஜேந்திரன் (29), குணான் (19) ஆகியோர் புதனன்று இரவு வாழை இலைக்கட்டுகளை விற்பனை செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். தண்ணீர் பந்தல் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் நிலைதடுமாறி சாலை யில் விபத்திற்குள்ளானது. இதில் ராஜேந்திரன், பேரரசு ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியால் குணான் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து சத்தி யமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு வழக்கு: ஏப்.24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை, மார்ச் 6- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்.24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவ ரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்த மான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்.23 ஆம் தேதி காவலாளியை கொலை செய்த  ஒரு கும்பல், பங்களாவிலிருந்த சில ஆவ ணங்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சயான் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாணை உதகை நீதிமன்றத்தில் நடந்து  வருகிறது. இந்நிலையில், உதகை ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் வெள்ளியன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி ஏடி எஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசி ஐடி போலீசாரும், குற்றவாளிகள் தரப்பில் வாளையார் மனோஜ் ஆஜராகினர். அப் போது நீதிபதி முரளிதரன், வழக்கு விசார ணையின் தற்போதைய நிலை குறித்து கேட்ட றிந்தார். அதற்கு அதிகாரிகள், இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், தொலைபேசி உரை யாடல்கள் குறித்து பிஎஸ்என்எல் நிறுவ னத்திடம் இருந்து தரவுகள் கேட்டுள்ளோம். அது குஜராத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து ஒரு சோதனை முடிவு வரவேண்டி யுள்ளது என தெரிவித்தனர். இதைத்தொ டர்ந்து, வழக்கு விசாரணையை ஏப்.24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மூளைச்சாவு ஏற்பட்ட சிறுவனின் உடலுறுப்புகள் தானம்

ஈரோடு, மார்ச் 6- மூளைச்சாவு ஏற்பட்ட 12 வயது சிறு வனின் உடலுறுப்புகள் தானமாகப் பெறப் பட்ட நிலையில், அவரின் உடலுக்கு அமைச் சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன்  மௌலீஷ் (12). வலிப்பு நோய் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வலிப்பு ஏற்பட்டு  ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை யில் புதனன்று அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனின் உறுப்புகளை தான மாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர். சிறுவ னின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கோவை மற்றும் ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மௌலீஷ் உடலுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தனர்.

முக்கிய சிக்னல்களில் பசுமைப் பந்தல்  நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் உறுதி

நாமக்கல், மார்ச் 6- கோடை வெயில் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்படும் என மாநக ராட்சி ஆணையாளர் உறுதியளித்துள்ளார். நாமக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. துணை மேயர் பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் வார்டுகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். அப் போது மாமன்ற உறுப்பினர் டி.டி.சரவணன் பேசுகையில், தமிழகம் முழுவதும் தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாமக்கல்லில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதால், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக் கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவ திக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்க ளின் நலன் கருதி நகரின் முக்கிய சிக்னல் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்க வேண் டும். கோடை காலத்தில் பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்கூட் டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார். மாமன்ற உறுப்பினரின் கோரிக்கைக ளுக்கு பதிலளித்துப் பேசிய மாநகராட்சி  ஆணையாளர் சிவக்குமார், மாநகராட்சியில் தற்போது தினசரி 2 கோடியே 90 லட்சம் லிட் டர் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோ கத்தில் எந்தக்குறையும் இல்லை. வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை காக்க,  நகரின் முக்கியப் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைப்பதற்கான பணிகள் மாநகராட்சி நிர் வாகத்தின் சார்பில் விரைவில் மேற்கொள் ளப்படும். மேலும், தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு நடவடிக் கைகள் மற்றும் கருத்தடை சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

ஈரோடு டாஸ்மாக் நிர்வாகத்தின் வினோதம்! உத்தரவை பின்பற்றிய ஊழியர் மீது நடவடிக்கை?

ஈரோடு, மார்ச் 6- காலி மதுபாட்டில்களை திரும் பப்பெறும் திட்டத்தில், நிர்வாகத் தின் உத்தரவுப்படி கூடுதல் விலை  வைத்து விற்ற விற்பனையாளர் மீது  டாஸ்மாக் நிர்வாகமே குற்றம் சுமத்தியுள்ள வினோதச் சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவுப்படி காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நடை முறையில் உள்ளது. இதற்காக, மதுபாட்டில்களின் விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூ லிக்க டாஸ்மாக் நிர்வாகம் வாய் மொழி மற்றும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தது. காலி பாட் டிலை ஒப்படைக்கும்போது இந்த ரூ.10 வாடிக்கையாளருக்குத் திரும்ப வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், ஈரோடு மாவட் டம் பவானிசாகர் அருகே உள்ள  கடை எண்: 3699-ல் கோவை சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். அப் போது, ரூ.280 மதிப்புள்ள மதுபாட் டிலை ரூ.290-க்கு (ரூ.10 கூடுதல்) விற்றதாகக்கூறி, அங்கிருந்த விற்ப னையாளர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் விளக்கமளிக்காவிட்டால் துறைரீதி யான நடவடிக்கை பாயும் என எச்ச ரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படியே கூடுதல் விலை வசூலிக்கப் படும் நிலையில், அதையே காரண மாக வைத்து ஊழியரை 6 மாத தற்காலிகப் பணிநீக்கம் செய்ய  துடிப்பது முரணாக உள்ளது. “சொன்னதைச் செய்த ஊழியரைப் பலிகடா ஆக்குவதா?” எனப் பணி யாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியார் சிலை அமைக்க தீர்மானம்  அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கோவை, மார்ச் 6- கோவை மாநகராட்சி மாமன்றத்தின் அவ சரக் கூட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ஆர். ரங்கநாயகி தலைமையில் நடைபெற் றது. மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத் தில், பல்வேறு முக்கியப் பணிகள் தொடர் பாக 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ‘தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவுசார் மைய’ வளாகத்தில் பெரி யார் சிலை அமைக்க முன் அனுமதி வழங்கு தல், மாநகராட்சிப் பூங்காக்களை பராமரித் தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல் உள் ளிட்ட 67 தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, குறுகிய கால இடைவெளி யில் இரண்டாவது முறையாக அவசரக் கூட்டத்தைக் கூட்டியதற்கு எதிர்ப்பு தெரி வித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மேய ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன் சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர். தொடர்ச்சியாக மாமன்றக் கூட்டத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்யும் கவுன் சிலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் மேயரி டம் வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்: இது குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவர் ராமமூர்த்தி, “கடந்த அதிமுக ஆட்சிக் காலத் தில், தேர்தல் நேரத்தில் பணிகளை விரைந்து  முடிக்க இது போன்ற அவசரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது கேட்டபோது, வளர்ச்சிப் பணிகளுக்காகவே இந்த நடவ டிக்கை என விளக்கமளித்தனர். ஆனால், தற் போது திட்டமிட்டே அவசரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதை ஏற்க முடியாது,” என்றார்.

மீன்பிடி ஏலம் அறிவிப்பு

ஈரோடு, மார்ச் 6- ஈரோடு மாவட்டத்தி லுள்ள வேம்பத்தி, கரும் பாறைப்பள்ளம் (கொண்டை யம்பாளையம் ஏரி), பிரம்ம தேசம் ஏரி (சந்தியபாளையம் ஏரி), வரதம்பாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம், கோசனம் மற்றும் வேம்மாண்டம்பா ளையம் ஆகிய 7 ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்த கைக்கு விடப்பட உள்ளது. 3  ஆண்டு காலத்திற்கு குத்த கைக்கு விட ஏதுவாக வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல்  மின்னனு ஒப்பந்தப்புள்ளி கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். 0424-2221912 தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம்.

மூதாட்டி கொலை

கோவை, மார்ச் 6- கோவை, நஞ்சுண்டா புரம் சாலையில் அமைந் துள்ள ‘பார்சன்’ அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கஸ்தூரி குட்டி (82). இவர் வெள்ளியன்று தனது வீட்டில் ரத்த வெள் ளத்தில் சடலமாக கிடந்துள் ளார். இதுகுறித்து தகவல றிந்த ராமநாதபுரம் போலீ சார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். முதற்கட்ட விசாரணை யில், உயிரிழந்த மூதாட்டி யின் கழுத்தில் இருந்த தங் கச்சங்கிலி மாயமாகி இருப் பது தெரியவந்தது. எனவே, நகையை பறிப்பதற்காகவே இந்த கொடூரக் கொலை அரங்கேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். இந்த வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். கொலை நடந்த நேரத்திலிருந்து அவர் கிடைக்காததால், அவரை பிடிக்க 5 தனிப்ப டைகள் அமைத்து தீவிர தேடு தல் வேட்டையில் ஈடுபட்டுள் ளனர்.

பிறப்புச் சான்றில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம்

திருப்பூர், மார்ச் 6- பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயர் பதிவு செய்வ தற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட  ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறப்புச் சான் றில் குழந்தையின் பெயர், பிறப்பு பதிவு செய்த ஓராண்டிற் குள் பதிவு செய்யலாம். காலதாமதக் கட்டணத்துடன் பிறப்பு  பதிவு செய்த 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயர் பதிவு செய் யலாம் என பிறப்பு இறப்பு பதிவு சட்டம் கூறுகிறது. அதன்படி  குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்புக ளுக்கு குழந்தையின் பெயர் பதிவு செய்யாத நிலை இருந்தது.  தற்போது அரசு செப்.26 வரை 15 ஆண்டுகள் நிறைவடைந்த  பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்ய  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே காலதாமதக்  கட்டணம் ரூ.200 செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு  செய்து பெயருடன் கூடிய சான்று பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மோசடி:5 பேர் கைது

திருப்பூர், மார்ச் 6 – கடன் பெற்றுத் தருவதா கக் கூறி ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நபரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த  ரமேஷ் குமார் (58), திருப்பூ ரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மற்றும் அன்பு ஆகிய இருவ ரிடமும் 2019 ல் தலா ரூ.3 லட் சம் வாங்கிக் கொண்டு கடன்  பெற்றுத் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டும்  அவர் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ரமேஷ் குமார்  அவிநாசியில் உள்ள ஹோட் டலில் இருப்பதாக அறிந்த தங்கப்பாண்டி, தனது நண் பர்கள் 4 பேருடன் சென்று  அவரை தாக்கி, காரில் கடத்தி  திருப்பூர் செந்தாம்பாளை யத்தில் உள்ள கார் பார்க்கிங் கில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டி யுள்ளனர். இதுகுறித்து ரமேஷ் குமாரின் நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் அவரை மீட்டு, தங்கப்பாண்டி (35), அன்பு (39), இசக்கிராஜா (24), ரஞ்சித் குமார் (28), முத்துக்குமார் (34) ஆகிய 5  பேரையும் வியாழனன்று கைது செய்தனர்.

மகளிர் தின நிகழ்வுக்கு அனுமதி வழங்க பெரியாரின் பெண்கள் அமைப்பு மனு

திருப்பூர், மார்ச் 6 - மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கே யத்தில் மார்ச் 7 நள்ளிரவு பெரியார் சிலைக்கு மாலை அணி விக்க அனுமதி கோரி பெரியாரின் பெண்கள் அமைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளது. காங்கேயம் பெரியாரின் பெண்கள் அமைப்பு பொறுப் பாளர் ஜோதிமணி வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதில்,  மார்ச் 7 இரவு காங்கேயத்தில் சர்வதேச மகளிர் நாள் விழா வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இரவு நேரங்களில்  அரசியல் இயக்கத்திற்கு அனுமதி இல்லை என்று காங்கேயம்  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பெண்களின் உரிமை களை கவனப்படுத்தவும், இரவு நேரங்களில் பெண்கள் வெளி யில் வரக்கூடாது என்ற பிற்போக்கு கருத்தை எதிர்த்தும் இந் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இது ஒரு கட்சியின் அரசி யல் நிகழ்வல்ல. பெண்கள் உரிமைக்கான பண்பாட்டு முயற்சி. எனவே இந்நிகழ்வுக்கு அனுமதி வழங்கும்படி பெரி யாரின் பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.

உடுமலை அருகே விபத்து:  குழந்தையுடன் தம்பதி பலி

உடுமலை, மார்ச் 6- உடுமலை அருகே வேன் மற்றும் இருசக்கர வாகனம்  நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித் தொழிலாளி தனது  மனைவி மகனுடன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி  கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (27) கூலித் தொழிலாளி.  அவருடைய மனைவி உஷாராணி (28) மகன் துருவன்(4). இவர்கள் மூவரும் வெள்ளியன்று இருசக்கர வாகனத்தில் உடு மலையில் இருந்து தாராபுரம் சாலையில் தாந்தோணி அருகே  வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் நேருக்கு  நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இந்த குடும்பத்தி னரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் மூன்று பேரும்  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், உடும லையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் வெங்கடேஷ் குமாரும் (36)  காயம் அடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து உடுமலை  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். விபத்தில் கூலித் தொழிலாளி குடும் பத்துடன் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.