முந்தய பக்கம்

விபத்து வழக்கில் மக்கள் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு

14 Jun 2026, 1:06 am
விபத்து வழக்கில் மக்கள் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு
<p><strong>விபத்து வழக்கில் மக்கள் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு</strong></p><p>நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் மூலம் விரைவாகவும் சுமூகமாகவும் தீர்த்து வைக்கும் மக்கள் நீதிமன்றம் தேசிய அளவில் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெற்றது. இதில் சமரச அடிப்படையில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி கார்த்தி, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரேவந்த், இரு தரப்பு வழக்கறிஞர்கள் வீ.ஆனந்தன், பாஸ்கர், டி.குமார் ஆகியோர் முன்னிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷ் என்பவருக்கு சமரச பேச்சு வார்த்தையின் மூலம் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram