அமைச்சர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல வசதிகளை மேம்படுத்திடுக
30 Jun 2026, 1:02 am
<p><strong>அமைச்சர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல வசதிகளை மேம்படுத்திடுக</strong> </p><p>அவிநாசி, ஜூன் 29- அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளப் பாதை மற்றும் சக்கர நாற் காலி வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழனிச் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவி நாசி சட்டமன்ற உறுப்பினரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான கமலி, வாரந்தோறும் தொகுதி அலுவல கத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டு வருகிறார். இந்த அலுவலகத்திற்கு வாரந்தோறும் ஏராளமான மாற் றுத்திறனாளிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், அவர் கள் எளிதாக உள்ளே சென்று வரத் தேவையான சாய்தளப் பாதை வசதி இங்கு இல்லை. மேலும், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி உள்ளிட்ட எவ்வித அடிப்படை அணுகல் வசதிகளும் செய் யப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடையூறுமின்றி அமைச்சரை சந்தித்து மனுக்களை அளிக்க ஏதுவாக, சட்டமன்ற அலுவலகத்தில் சாய்தளப் பாதை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்துத் தேவை களையும் போர்க்கால அடிப்படையில் அமைத்துத் தர சம் பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
