கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
13 Nov 2025, 3:30 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை ஏற்பு: சாக்கடையை தூர்வார்வதாக அலுவலர்கள் உறுதி

உடுமலை,நவ.13- சாக்கடையை சுத்தம் செய்யாத பள்ளபாளையம் ஊராட்சி யைக் கண்டித்து வியாழனன்று ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், அரசு அலுவ லர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது. உடுமலை ஊராட்சி ஒன்றியம் பள்ளபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட மூணார் முக்கிய சாலையில் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் சாக்கடை கால் வாய் கட்டி முடிக்கப்பட்டு முழுமை பெறாமல் நிறுத்தி வைக் கப்பட்டது. இதனால் கழிவுநீர், மழைநீர் தேங்கி குடியிருக் கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள் ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் உங்க ளுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் மனு அளிக்கப்பட்டுள் ளது. இருப்பினும் சாக்கடையை முழுமையாக கட்டி முடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவ் வாயன்று இரவு பெய்த கனமழையால் கழிவுநீரும், மழை நீரும் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதை உடனடியாக அகற்ற வேண்டும். பாதியில் நிற்கும் சாக்கடை கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க என வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளபா ளையம் கிளைகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் அலுவ லர்கள் வேலையை உடனடியாக துவங்குவதாக கட்சி நிர்வா கிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது.

எஸ்.ஐ.ஆர். அலைக்கழிக்கப்படும் மக்கள்: ஆட்சியர் கள ஆய்வு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், நவ.13- தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர சீராய்வு பணிகள் மக்களை அலைக்கழிப்பதாக உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் நேரடியாகக் கள ஆய்வு செய்து சரி செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கூட்டம் வியா ழனன்று செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர். மதுசூதனன் தலைமையில் தியாகி பழனிசாமி நிலையத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் சி.மூர்த்தி உள்ளிட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்: இந்திய தேர்தல் ஆணையம் 2002 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர சீராய்வுப் பணிகளை கடந்த நான்காம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. இதனொரு பகுதியாக, வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக் காளர்களுக்கு படிவங்களைக் கொடுக் கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அளவில் வாக்காளர் படிவங்களை நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து கொடுப்ப தைத் தவிர்த்து, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை அந்த இடத்திற்கு வரச் சொல்லி படி வங்களைக் கொடுப்பதாக உள்ளது. ஒரு சில இடங்களில் ஒரே ஒரு படிவத்தை மட்டும் வாக்காளர்களுக்கு கொடுப் பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்ற னர். வாக்காளர் எழுப்பும் கேள்விகளுக் கும், சந்தேகங்களுக்கும் எந்த விதமான விளக்கமும் சொல்லத் தெரியாத, தேர் தல் சம்பந்தமான விவரங்கள் தெரியாத ஒப்பந்த கடைநிலை ஊழியர்களை இப் பணியில் ஈடுபடுத்துவதையும், மேலும், உடனடியாக படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும் என வாக்காளர் களை பயமுறுத்தி படிவங்களை பறித்துச் செல்லும் நிலை உள்ளது. அது மட்டுமின்றி இளம் வாக்காளர்கள் படி வத்தை முழுமையாக நிரப்பவேண்டிய தில்லை என்று சில வாக்குச்சாவடி அலு வலர்கள் இளம் வாக்காளர்களை சில இடங்களில் தவறாக வழி நடத்துவதாக வும் தெரிகிறது. கிராமப்புறங்களில் பட் டியலின வாக்காளர்கள் படிவங்களை நிரப்புவது குறித்த பல்வேறு அச்சங் களை வெளிப்படுத்துகிறார்கள். அவர் களுக்கு விளக்கிச் சொல்வதில்லை. தேர்தல் ஆணையம் குறுகிய காலத் தில், அவசரக் கோலத்தில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களை, ஆசிரியர்களை, கடைநிலைப் பணியாளர்களை நிர்ப்பந் தம் செய்வதால், அவர்களும் தேர்தல் ஆணையத்தின் அழுத்தம் காரணமாக மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங் கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது.

நவ.17 முதல் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர், நவ.13- டிஎன்பிஎஸ்சி தொகுதி II மற்றும் IIஎ முதன்மை தேர்வுக் கான வகுப்புகள் நவ.17 காலை 10 மணிக்கு ஆட்சியரகத்தில் உள்ள அறை எண். 439-ல் தொடங்கப்படவுள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை யின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை II போன்ற தொகுதி – II பணிகளுக்கும் முதுநிலை ஆய் வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியா ளர் போன்ற தொகுதி II எ பணிகளுக்கும் என மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 28 அன்று முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதைதொடர்ந்து முதன்மைத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி II மற்றும் IIஎ முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் நவ.17 காலை 10 மணிக்கு அறை எண். 439-ல் தொடங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இரு முறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக் கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421- 2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் மனிஷ்நாரண வரே, தெரிவித்துள்ளார்.

குப்பை பிரச்சனை: முதல்வருக்கு எம்.பி. கடிதம்

திருப்பூர், நவ.13 – திருப்பூர் மாநகர குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் தலையிட வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வியாழ னன்று முதல்வருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை குவிந்து வருகின்றது. குப்பையை சுற்றுப்புறங்களில் எங்கும் கொட்ட முடியாத நெருக்கடி கள் ஏற்பட்டுள்ளன. ஆத னால் கையறு நிலையில் நிர்வாகம் தத்தளிக்கிறது. குறிப்பாக, சின்னக்காளி பாளையம் பகுதிகளில் குப்பை கொட்டக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, அங்கு குப்பை கொட்டுவது நடைமுறை சாத்தியமல்ல, அதை கைவிட்டு, மாற்று வழி தேட வேண்டும். இது சம்பந்த மாக, முதல்வர் போர்க் கால வேகத்தில் தலை யிட்டு, குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கே.சுப்பரா யன் எம்.பி. கேட்டுக் கொண் டிருக்கிறார்.