புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத் திரையிடலின்போது ஏபிவிபி வன்முறை இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்
26 Sept 2026, 10:11 pm

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத் திரையிடலின்போது ஏபிவிபி வன்முறை

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

புதுச்சேரி, செப். 26 –புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உமர் காலித் குறித்த ஆவணப்படத் திரையிடலின்போது ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு மாணவர் சங்க நிர்வாகிகளைத் தாக்கியுள்ளதாக இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித் குறித்த ஆவணப் படம், புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அம்பேத்கர் மாணவர்அமைப்பின் (ASA) சார்பில் வெள்ளிக்கிழமை (செப். 25) மாலை திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் ரகளையில் ஈடுபட்டதோடு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் சங்க நிர்வாகிகளையும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து புதுச்சேரி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இதில் ஒரு மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

கண்டனம்

இச்சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்க புதுச்சேரி மாநிலச் செயலாளர் பிரவீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஏபிவிபியின் அராஜ

கத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘Prisoner No. 626710 is Present’என்ற உமர் காலித் ஆவணப்படத் திரையிடலைத் தடுக்க முயன்றதுடன் மாணவர்கள் மீதும் ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிவைக்கப்பட்ட மாணவர்களுக்கும் ஏ எஸ் ஏ அமைப்புக்கும் ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பில் இணைந்ததாகத் தெரிவித்த அவர், ஆவணப்படத் திரையிடலுக்கு எதிரான இத்தாக்குதல் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கும் ஜனநாயக வெளிகளை அச்சுறுத்தும் வெளிப்படையான முயற்சி என்றார். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்களுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து ஜனநாயக வெளிகளிலும் ஏபிவிபிமற்றும் ஆர்எஸ்எஸ் குழுக்களால் கட்டவிழ்த்து விடப்படும் அராஜகத்திற்கு எதிராக உறுதியாகத் துணை நிற்போம் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.