தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனம் – சிஐடியு இடையே சுமூக உடன்பாடு!

29 Oct 2026, 8:48 pm
ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனம் – சிஐடியு இடையே சுமூக உடன்பாடு!
<p><strong>ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனம் – சிஐடியு இடையே சுமூக உடன்பாடு!</strong></p><p>கோவை, அக்.29-கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனம் மற்றும் சிஐடியுதொழிற்சங்க நிர்வாகிகள் இடையே வியாழனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடுஎட்டப்பட்டுள்ளது.</p><p>கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்மற்றும் ரூ.500 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்குவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.கடந்த ஆண்டைப் போலவே இந்தஆண்டும் 10 சதவீத போனஸ் வழங்கப்படுவதுடன், கூடுதலாக ரூ.500 மதிப்பிலான பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளநிறுவனக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 900 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். வரும் திங்கட்கிழமை போனஸ் தொகை வழங்கப்படும் என நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.இப்பேச்சுவார்த்தையில் ஏபிடி தொழிற்சங்கத்தின் கௌரவத் தலைவர் எம். அருணாச்சலம், தலைவர் கே.செவ்வந்திப்பன், பொதுச்செயலாளர் ஆர். ஆறுமுகம், பொருளாளர் ஜெ. ஜெயகுமார்ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் சார்பில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் செல்லமுத்து,சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த உடன்பாட்டின் மூலம் பெங்களூரு, ஆலுவா, ஹைதராபாத் மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி,சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் பணிபுரியும் சுமார்900 தொழிலாளர்கள் பயனடைவார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.