தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

19 Jan 2026, 2:23 pm
திருச்சி விரைவு செய்திகள்

குமரி, நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் தலைமறைவு குற்றவாளிகள்

163 பேர் கைது நாகர்கோவில், ஜன. 19- குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்க ளில் தலைமறைவு குற்றவாளிகள் 163 பேரை போலீசார் கைது செய்தனர். தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி சரவணன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி, கன்னியா குமரி மாவட்டங்களில் நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த 163 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவட்டார் அருகே மரத்திலிருந்து விழுந்தவர் பலி அருமனை, ஜன.19- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்( 49) கூலித்  தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டு அருகில் இருந்த  புளிய மரத்தில் புளி பறிப்பதற்காக ஏறி உள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது  இந்நிலையில்  சிகிச்சை பலனிக்காமல் ஞாயிற்றுக் கிழமை இரவு  ஜாண்  இறந்துள்ளார்.. இது சம்பந்தமாக திருவட்டார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவர்குள த்தில்  சகோதரியை  வெட்டிக்கொன்றவர் கைது திருநெல்வேலி, ஜன. 19- நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (56). இவருக்கு ராதிகா(28) என்ற மகளும் கண்ணன் (25) என்ற மகனும் உள்ளனர். கண்ணன் தனது தாயுடன் வேலூரில் தங்கி இருந்து தின்பண்டங்கள்  விற்பனை செய்து வந்துள்ளார்.  இதனால் தேவர் குளத்தில் தந்தை ராமராஜுடன் மகள் ராதிகா வசித்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடு வதற்காக கண்ணனும் அவரது தாயும் கடந்த சில நாட்களு க்கு முன்னர் சொந்த ஊர் வந்திருந்தனர்.   ராதிகா தேவர் குளத்தை சேர்ந்த திருமணமான ஆண் உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் பேசுவதை கண்டறிந்து குடும்பத்தினரிடம் தெரிவித்து கண்ணன் சண்டை யிட்டுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொலைபேசி  உரையாடல்கள் நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் ராதிகாவிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலை யில் ஞாயிறன்று இரவு மீண்டும் சண்டை நடந்துள்ளது. இந்தச் சூழலில் ராதிகாவின் தாய் தந்தையினர் அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ள னர். அப்போது  மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த   கண்ணன் ராதிகாவை கண்டித்த  போது தகராறு முற்றி இருவருக்கும்  கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  கண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராதிகாவை வெட்டியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர்  ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். ராதிகாவின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேவர்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜன.22 ல் விவசாயிகள்  குறை தீர் கூட்டம்  தூத்துக்குடி, ஜன.19- தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 22 வியாழன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற வுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 22.01.2026 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்”  நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மது போதையில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர் கைது தூத்துக்குடி, ஜன.19- தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிறு மாலை நாசரேத் நோக்கி சென்ற அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநரான புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) என்பவர் இயக்கிச் சென்றார்.  பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். முத்தையா புரம் அருகே வந்தபோது பேருந்து தாறுமாறாக சென்ற தாக தெரிகிறது. இதையடுத்து முத்தையாபுரம் காவல்  ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் பேருந்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஓட்டுர் ரமேஷ், மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சேலம் - சென்னை இடையே விரைவில் கூடுதல் விமானம்: அதிகாரிகள் தகவல் சேலம், ஜன.19- சேலம் - சென்னை இடையே கூடுதல் விமானம் சேவை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ், பெங்களூரு, ஐதரா பாத், கொச்சி ஆகிய 3 நகரங்களுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வரு கின்றன. மேலும், உதான் திட்டமில்லா மல் சேலம் - சென்னை இடையே தினசரி விமானசேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. 4 முக்கிய நகரங்களுக்கு சேலத்திலிருந்து விமானங்கள் இயக்கப் படுவதால், தினமும் குறைந்தது 300 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற் போது சேலம் -சென்னை இண்டிகோ விமானம், மாலை 3.20 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு மாலை  5.30 மணிக்கு விமானம் வந்து சேர்கிறது.  இந்நிலையில், சேலம் - சென்னை இடையே காலை நேரத்தில் விமான சேவை வழங்க கேரளாவை தலைமையிடமாக கொண்ட அல்ஹிண்ட் ஏர் நிறுவனம், ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறையை நாடியது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் - சென்னை இடையே தற்போது இண்டிகோ நிறுவனம் ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. தற்போது அல்ஹிண்ட் ஏர் நிறுவனம் மேலும் ஒரு விமானத்தை சேலம் - சென்னை இடையே இயக்க அனுமதி பெற்றிருக்கிறது. இந்த புதிய விமான சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட தொழில திபர்கள், வியாபாரிகள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு இந்த விமானம் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம், என்றனர்.

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி, ஜன.19- தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிய வற்றிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “2026-2027 ஆம் கல்வியா ண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்கு தல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொ ழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூல மாக வரவேற்கப்படுகின்றன. இதற்காக www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமா னது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.02.2026. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 044-22501006(113) என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளை பராமரிக்க கோரி டிராக்டர் பேரணி  ஆட்சியர் அனுமதி வழங்க விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி, ஜன.19- எப்போதும்வென்றான் கண்மாய் மற்றும் நீர்நிலைக ளை பராமரிக்க கோரி அமை தியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்து க்குடி மாவட்ட ஆட்சியரிடம் எப்போதும்வென்றான் கண்மாய் நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தினர்  அளித்த மனுவில், “எப்போ தும்வென்றான் கண்மாய், அதன் வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகள் கடந்த பல ஆண்டுகளாக முறை யாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. 2024-ஆம் ஆண்டு முதல் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, விவசாயிகள் வருமான இழப்பையும் வெள்ள பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வருகிற 30ஆம் தேதி அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்ட மிட்டுள்ளனர். பேரணி முழு மையாக அமைதியான முறையில், ஆயுதமின்றி நடைபெறும்.    பொதுமக்க ளுக்கும் போக்குவரத்தி ற்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

புலிகள் கணக்கெடுப்பு பணி: ஜன.24 வரை வன சோதனை சாவடிகள் மூடல்

திருநெல்வேலி, ஜன. 19-            புலிகள் கணக்கெடுப்பு பணியையொட்டி மணிமுத்தாறு-அகஸ்தியர் அருவிகள் மற்றும் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன.19 திங்கள் முதல் ஜன.24 வரை வன சோதனை சாவடிகள் மூடப்பட்டுள்ளன.          தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தலைமையில், மாநில வன துறைகளின் ஒத்துழைப்புடன் 4 ஆண்டுகளுக்கு  ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.    வனப்பகுதிகளில் காமிரா பொருத்தப்பட்டு, புலிகளின் இருப்பு, எண்ணிக்கை மற்றும் அதன் போக்கு கணக்கிடப்படும். கடந்த 2021-க்கு பின் தற்போது நாடு முழுவதும் இப்புலிகள் கணக்கெடுப்பு பணி திங்கட்கிழமை அன்று தொடங்கி உள்ளது.அதன் ஒரு பகுதியாக, அம்பாசமுத்திரம் வன கோட்டத்திலும் இக்கணக்கெடுப்பு நடக்கிறது. மொத்த வனப்பகுதி 2 சதுர கிலோ மீட்டர் ஒரு கட்டமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு ஜோடி காமிரா டிராப்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது இக்கணக்கெடுப்பை 24-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. களக்காடு மற்றும் அம்பாசமுத்திரம் வன கோட்டங்களுக்கு உட்பட்ட 7 வன சரகங்களின் வனப்பணியாளர்களுக்கு விரிவான களப்பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டது.             24 ஆம்தேதி வரை 6 நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது, புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது மனிதர்களின் நடமாட்டம் மற்றும் பிற இடையூறுகள், இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால், தரவு சேகரிப்பு பணிகள் துல்லியமாக மேற்கொள்ள இயலும். எனவே திங்கட்கிழமை முதல் 24-ஆம் தேதி வரை 6 நாட்கள் பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு மற்றும் திருக்குறுங்குடி வன சோதனை சாவடிகள் மூடப்படுகிறது.                 வனப்பகுதிக்குள் அமைந்துள்ள களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி சுற்றுலா தலங்களுக்கும், திருக்குறுங்குடி நம்பி கோவில், காரையார் சொரி முத்து அய்யனார் கோவில் உள்ளிட்டவற்றுக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பின்னர், 25-ந்தேதி முதல் வழக்கம் போல் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் மற்றும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கோவில் களுக்கும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.