தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை முக்கிய செய்திகள்

20 Dec 2025, 3:38 pm
சென்னை முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார்  7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

செங்கல்பட்டு, டிச.20-
தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 27,87,362 வாக்காளர்களில் 7,01,871 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,871 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 20,85,491 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலமாக மொத்த வாக்காளர்களில் 25% குறைந்துள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7,02,450, நீக்கம் - 2,18,444, இறுதி வாக்காளர் எண்ணிக்கை- 4,84,005.
பல்லாவரம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,44,498, நீக்கம்- 1,49,789, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,94,712.
தாம்பரம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,15,483, நீக்கம் - 1,21,137, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,94,346.
செங்கல்பட்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,45,500, நீக்கம்- 1,06,270, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 3,39,231.
திருப்போரூர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 3,19,534, நீக்கம் - 47,558, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,71,976.
செய்யூர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 2,28,255, நீக்கம் - 32,394, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 1,95,861.
மதுராந்தகம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 2,31,642, நீக்கம் - 26,309, இறுதி வாக்காளர் எண்ணிக்கை 2,05,333.
சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் 2,18,444 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சோழிங்கநல்லூரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,02,450-லிருந்து 4,84,005 ஆகக் குறைந்துள்ளது.

மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம், டிச.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்டது பனப்பாக்கம் கிராமம், இக்கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு பன்றிகள் அழித்து வரும் நிலை உள்ளது. அதனால்அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், தனது விவசாய நிலத்திற்குள் பன்றிகள் புகாத வகையில் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் லட்சுமணன் (வயது 26),  என்பவர் வெள்ளிக்கிழமை தவறுத லாக அந்த மின் வேலி அமைக்கப்பட்டுள்ள விவசாய நில பக்கம் சென்றவர் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த லட்சுமணனின் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விவசாயிகள் தனித்துவ அடையாள எண்  பெற டிசம்பர் 28 கடைசி நாள்  வேளாண் இணை இயக்குநர் தகவல்

திருப்பத்தூர், டிச.20-  மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெறவும், பிரதமரின் விவசாயிகள் ஆதரவு  நிதி (PM-Kisan) மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெறவும் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியமாகும்.  இதுவரை இந்த அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் ஆதார் மற்றும் பட்டா விவரங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது வட்டார வேளாண் அலுவலகங்களை அணுகி, வரும் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்த்திகை தீபம் ஏற்றியபோது  சேலையில் தீப்பற்றி விபத்து சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப உயிரிழப்பு

சென்னை, டிச. 20-  சென்னை மேற்கு மாம்பலம் கிருபா சங்கரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வேதவள்ளி (59). இவர்களது மகள் சுஜாதா (28), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி கார்த்திகை தீபத்தை யொட்டி வேதவள்ளி தனது வீட்டில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விளக்கின் தீ அவரது சேலையில் பட்டது.  வேத வள்ளி சுதாரிப்பதற்குள் தீ உடல் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், வேதவள்ளி மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேதவள்ளி, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர், மணலி பகுதிகளில்  குடிநீர் விநியோகம்   இன்று முதல் தற்காலிக நிறுத்தம்

சென்னை, டிச.20-  நீருந்து நிலைய பிரதான குடிநீர் குழாய் மாற்றும் பணி காரணமாக வரும் 22-ம் தேதி காலை 10 மணி முதல் 24-ம் தேதி காலை 10 மணி வரை திருவொற்றியூர், மணலி பகுதியில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் பிரதான குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 22-ம் தேதி (திங்கள்) காலை 10 மணி முதல் 24-ம் தேதி வரை காலை 10 மணி வரை அந்த நீருந்து நிலையமும், மணலி நீருந்து நிலையமும் தற்காலிகமாக செயல்படாது. திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு உட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சடையன்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் அரசுக்கு திறன்மிகு உதவியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை, டிச. 20-
நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் திறன்மிகு உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.குருசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெடுஞ்சாலைத்துறையில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டு சாலைப் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1986-ஆம் ஆண்டு இருந்த சாலை
களின் நீளத்திற்கு ஏற்ப, அப்போது சாலை
ஆய்வாளர்கள் (தற்போது திறன்மிகு உதவி யாளர்கள் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பணி
யிடங்கள் மொத்தம் 1,801 ஆக நிர்ணயிக்கப்பட்டி ருந்தது. ஆனால், அதற்குப் பிறகு சாலைகளின் நீளம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சுமார் 65,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள சாலைகள் உள்ளன.
பணியிடப் பற்றாக்குறை
துறை விதிகளின்படி, 25 கி.மீ நீளமுள்ள சாலைக்கு ஒரு சாலை ஆய்வாளர் என்ற அடிப்படையில் பார்த்தால், தற்போது 2,600-க்கும் குறையாமல் பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 1,800 பணியிடங்களிலேயே தற்போது 900 இடங்கள் காலியாக உள்ளன. இதோடு கூடுதலாக 800 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில், இன்றைய தேதியில் மொத்தம் 1,700 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கத்தின் கோரிக்கைகள்
இப்பணியிடங்களை நிரப்பும்போது 3:1 என்ற விகிதாச்சார அடிப்படையில், துறையில் தகுதியுள்ள சாலைப் பணியாளர்களுக்கு 25 சதவீத பதவி உயர்வு வழங்கி சுமார் 425 நபர்களை நியமிக்க வேண்டும். மீதமுள்ள 1,275 பணியிடங்களை, ஐ.டி.ஐ சிவில் படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிற்காகக் காத்தி ருக்கும் இளைஞர்களைக் கொண்டு நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் எனத் தமிழக அரசைத் திறன்மிகு உதவியாளர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஒப்பந்த முறையைக் கைவிட வலியுறுத்தல்
நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்கள் பணியிடங்கள் மட்டுமே அவ்வப்போது அதி கரிக்கப்படுகின்றன; இதர பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதில்லை. எனவே, இன்றைய தேவைக்கேற்ப அனைத்து நிலைப் பணி யிடங்களின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்த வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற பொறி
யாளர்கள் மற்றும் பணியாளர்களை மீண்டும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிய மர்த்தும் முறையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
நேரடிப் பராமரிப்பு
சாலைப் பணிகளைக் களத்தில் இருந்து மேற்பார்வை செய்யும் சாலை ஆய்வாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அனைத்து வகைச் சாலைகளின் பராமரிப்புப் பணிகளையும் ஒப்பந்ததாரர்கள் வசம் ஒப்படைக்காமல், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  84,329 வாக்காளர்கள் நீக்கம்

கள்ளக்குறிச்சி, டிச.20- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர்கள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் பிரசாந்த் சனிக்கிழமை வெளியிட்டார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 5,36,627, பெண் வாக்காளர்கள் 5,39,441 இதர வாக்காளர்கள் 210 என மொத்தம் 10,76,278 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 33,797 நபர்கள் இறந்துபோனதாகவும், 42,208 நபர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2,615 நபர்கள் கண்டறிய முடியாதவர்களாகவும், 5,709 நபர்கள் இருமுறை பதிவில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டு, மொத்தம் 84,329 நபர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் ஆண்கள் 1,33,614, பெண்கள் 1,36,458, இதரர் 68 என மொத்தம் 2,70,140. ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்கள் 1.31,734, பெண்கள் 1,30,780, இதரர் 50 என மொத்தம் 2,62,564. சங்கராபுரம் தொகுதியில் ஆண்கள் 1,26,899, பெண்கள் 1,29,216, இதரர் 46 என மொத்தம் 2,56,161. உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஆண்கள் 1,44,380, பெண்கள் 1,42,987, இதரர் 46 என மொத்தம் 2,87,413 உள்ளனர். நீக்கப்பட்டவர்கள் விபரம்: உளுந்தூர்ப்பேட்டை - 17,474, ரிஷிவந்தியம் - 20,317, சங்கராபுரம் - 24,215, கள்ளக்குறிச்சி (தனி) - 22,323 என மொத்தம் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சில்லறை விற்பனையில் மாற்றங்கள்:  கருத்தரங்கு

சென்னை, டிச,20-  சில்லறை விற்பனையின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைத்தல்’ என்ற முதல் மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது.   பாரம்பரிய இந்திய ஆடை விற்பனையாளரான ராம்ராஜ் காட்டன், ‘கல்ச்சர் கனெக்ட்  என்ற பெயரில் இந்த மாநாட்டை நடத்தியது. இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சில்லறை வணிக உரிமையாளர்கள் மற்றும் துறை சார்ந்தநிபுணர்கள் கலந்து கொண்டனர். மாறிவரும் நுகர்வோர் நடத்தை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தை இழக்காமல் நவீனமடைவது எப்படி என்பது குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது.  நுகர்வோர் வளர்ச்சி, சில்லறை வணிகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்குமற்றும் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்வது குறித்து விவாதங்கள் நடைபெற்றன என்று  ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் கூறினார். இந்திய சில்லறை வணிகம் வேகமாக மாறி வருகிறது, ஆனால் அதன் அடிப்படை நம்பிக்கை மற்றும் உறவுகளில் உள்ளது. பாரம்பரிய வணிகங்களும் நவீன சில்லறை விற்பனையும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் தளமாக  இந்த மாநாடு நடைபெற்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்  ஆருத்ரா தரிசன விழா அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

சிதம்பரம், டிச.20-  சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா டிசம்பர் 25-ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.  ஜனவரி 2-இல் தேரோட்டமும், 3-ஆம் தேதி தரிசனமும் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் உதவி ஆட்சியர் கிஷன்குமார் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில் தரிசன விழாவை மதியம் 4 மணிக்குள் முடிப்பது, தற்காலிக கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், பாதுகாப்புப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  1.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

கிருஷ்ணகிரி, டிச.20- கிருஷ்ணகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 15 லட்சத்து 6 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 1 லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ் குமார் வெளியிட்டார். இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், 2026 நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 6 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது 6 தொகுதிகளில் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்படாத, இறந்த 71,945 பேர், முகவரியில் வசிக்காத 10,359 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 81,246 பேர், இருமுறை பதிவு செய்த 10,652 பேர் மற்றும் மற்றவை 167 என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக ஓசூர் தொகுதியில் 43,646 வாக்காளர்களும், வேப்பனப்பள்ளியில் 28,623, தளி 28,314, பர்கூர் 25,748, கிருஷ்ணகிரி 25,461, ஊத்தங்கரையில் 22,757 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்க ளின் பார்வைக்காக ஆட்சியர், கோட்டாட்சி யர், மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சி யர் அலுவலகங்களிலும், 2092 வாக்குச்சாவடிகளிலும் வைக்கப் பட்டுள்ளன. இங்கு வாக்காளர்கள் தங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.