தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு அல்ல, நீட்டையே விலக்க வேண்டும்

12 May 2026, 8:53 pm
நீட் தேர்வுக்கு விலக்கு அல்ல, நீட்டையே விலக்க வேண்டும்

நீட் தேர்வுக்கு விலக்கு அல்ல, நீட்டையே விலக்க வேண்டும்

வினாத்தாள் கசிவு காரணமாக இளநிலை மருத்துவப் படிப்புக்காக மே 3 அன்று நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையும் மறு தேர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் தேர்தல்களோ தேர்வுகளோ முறைகேடின்றி நடப்பதே இல்லை என்கிற நிலையே ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்கு மாற்றியதன் விளைவால் இந்த நீட் தேர்வு எனும் அநீதி மாநிலங்கள் மீது திணிக்கப்பட்டது. அதனால் பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் இந்த தேர்வில் தேர்ச்சியடையாததால் பல மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அரியலூர் அனிதா முதல் எத்தனை இளந் தளிர்களை தமிழ்நாடு இழந்துள்ளது.

அதனால் தான் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சனையை எழுப்பிய பின்னரே அந்த விஷயமே வெளியே வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தமிழ்நாட்டுக்கு அனுமதி அளித்ததாக பீற்றிக் கொள்ளும் ஒன்றிய அரசு நீட்டுக்கு விலக்கு அளிக்க மறுப்பது ஏன்?

ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்கிற வருணாச்சிரம மனநிலையும் காசுள்ளவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் கார்ப்பரேட் வியாபார எண்ணமுமே ஆகும். அதனால் பயிற்சி மையங்கள் அமைத்து பணம் பண்ணுகிற தொழிலாகிவிட்டது மருத்துவப் படிப்பு. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் நீட் தேர்வு பயிற்சி வணிகம் செழித்துக் கொண்டிருக்கிறது; அதீத ஆசையால் வினாத்தாள் கசிவுகளும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன.

இப்போதும் ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களில் தான் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது. 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மறு தேர்வு நடந்தால் சுமார் 23 லட்சம் மாணவர்கள் மீண்டும் சிரமத்துக்கு உள்ளாவது பற்றிய உறுத்தல் ஏதுமின்றி ஒன்றிய கல்வி அமைச்சகம் செயல்படுகிறது. பாஜக ஆட்சியில் நேர்மையான தேர்வுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத நிலையே தொடருகிறது.

மருத்துவப் படிப்புக்கு ஏற்கெனவே இருந்தது போல பிளஸ் 2 மதிப்பெண்களையே தகுதியாகக் கொண்டு சேர்க்கை நடத்துவதே சரியானதாகும். எனவே நீட் தேர்வுக்கு விலக்கு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே தேவை. அதனால் நீட் தேர்வையே முற்றிலுமாக விலக்கிட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.