விபிஜி ராம்ஜி திட்டத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்! தியாகதுருகத்தில் மாற்றுத்திறானளிகளை இழுத்துச்சென்று கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்
1 Jul 2026, 11:25 pm

விபிஜி ராம்ஜி திட்டத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்! தியாகதுருகத்தில் மாற்றுத்திறானளிகளை இழுத்துச்சென்று கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்

திருவண்ணாமலை, ஜூலை 1- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி 100 நாள் வேலை திட்டத்தை முடக்க நிலைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் அந்த சட்ட நகலை எரித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பி. சத்யா தலைமை தாங்கினார், மாநில பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி கண்டன உரையாற்றினார். ஆரணியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ரமேஷ் பாபு, சந்திரசேகரன், கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பாக்கியராஜ், செங்கத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா. சிவாஜி ஆகியோர் தலைமை யில் திரளான மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்ட னர்.

கள்ளக்குறிச்சியில் காவல்துறை அராஜகம் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கள்ளக்குறிச்சி,தியாகதுருகம்,வாணாபுரம் ஆகிய மையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தின் போது மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் விதமாக மிரட்டும் வகையில் பேசினர்.

மாற்றுத்திறனாளிகள் என்று கூட பாராமல் உரிமைக்காக போராடியவர்களை தரதர வென இழுத்துச் சென்று கைது செய்ததோடு சங்கத்தின் மாவட்டத் தலை வர் வைத்தியலிங்கம் நடப்ப தற்கு பயன்படுத்தும் ஊன்று கோலை உடைத்தும் பலவந்தமாக குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதனை படம் பிடித்த தீக்கதிர் செய்தியாளர் சசிக் குமாரிடம் காவல் கண்காணிப்பாளர் செல்வம் ஒருமையில் பேசியதோடு செய்தியாளரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு சக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ள னர். காவல்துறை அதிகாரி மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம் தலை மையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்ட த்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் மாவட்ட செயலாளர் வேலு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 170 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்னர்.

தியாகதுருவத்தில் மாவட்ட தலைவர் என்.வைத்திலிங்கம் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றிய தலைவர் கே.கொளஞ்சி, ஒன்றிய பொருளாளர் எஸ்.பலராமன், ஒன்றிய து.செயலாளர் பி.வடி வேல்,உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர். கடலூரில் ஆயிரம் பேர் கைது கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வி. வசந்தி தலைமையில் சட்ட நகலை கிழித்து எரிந்து சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

முன்னதாக, சிஐ டியு அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். ஆள வந்தார், மாநகர் செயலர் அப்துல் ஹமீது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, ஏ. ஜெயலட்சுமி, வி. சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் பாலக் கரை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமை தாங்கினார். கருப்பு கொடி ஏந்தி மறிலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்தனர். பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கலைச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடியில் வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராம.நடேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் முத்தையன், மணிகண்டன் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப் பட்டனர். விழுப்புரம் 7 மையங்களில் மறியல் விழுப்புரம் மாவட்ட த்தில் விழுப்புரம், திண்டி வனம், வானூர், விக்கிர வாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் மேல்மலையனூர் உள்ளிட்ட 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் 1500 பேரை போலீசார் கைது செய்தனர்

அதில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற நகல் எரிப்பு மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் நம்பு ராஜன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு நகலை எரித்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மறியலில் மாநில துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.செல்வி, பி.கௌரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுறை, இ.முரு கன், எஸ்.பாண்டியன், ஏ.மணிகண்டன், வி.எழி லரசி, எம்.ரங்கநாதன் உட்பட மறியலில் ஈடுபட்ட 336-பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று விக்கிர வாண்டியில் மாவட்டத் துணைத் தலைவர் ஜி.அய்ய னார் தலைமை யில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மும்மூர்த்தி உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர், திரு வெண்ணெய்நல்லூரில் மாவட்ட தலைவர் ஜி.ஜெயக் குமார் தலை மையில் ஒன்றிய நிர்வாகிகள் செய லாளர் தட்சிணா மூர்த்தி, தலைவர் ஜெய லட்சுமி உட்பட 179- பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனத்தில் மாவட்ட துணைத் தலை வர் டி.மணிகண்டன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் டி.ராமதாஸ், வெங்கடேசன்மாவட்ட குழு அல்லிமுத்து உட்பட 167- பேரை போலீசார் கைது செய்தனர்.

வானூரில் மாவட்டப் பொருளாளர் யுகந்தி தலை மையில் நடந்த மறியலில் வட்ட செயலாளர் எஸ்.பால முருகன், கட்சி வட்ட குழு சுந்தரமூர்த்தி,ஒன்றிய பொருளாளர் வரதன் உட்பட 196 பேரை போலீ சார் கைது செய்தனர்.

கண்டாச்சிபுரத்தில் மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன் தலைமையில் நடைபெற்ற மறியலில் வட்ட செயலாளர் எம்.முருகன், வட்ட தலைவர் பி.அருணச்சலம் வட்டப் பொருளாளர் எஸ்.புஷ்பா உட்பட 166 பேரை போலீசார் கைது செய்த னர், மேல்மலையனூரில் மாவட்ட துணைச்செய லாளர் சி.குமார் தலை மை யில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.