திருச்சி விரைவு செய்திகள்
24 Jul 2026, 10:02 pm

அபிராமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திடுக சட்டமன்ற உறுப்பினரிடம் சிபிஎம் மனு அளிப்பு

இராமநாதபுரம்,ஜூலை 24- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிரா மத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை த்தந்தார். அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா குழு அபிராமம் கிளையின் சார்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் அபிராமத்தில் பேரூராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தை காலி செய்து ராம்கோ கூட்டுறவு நியாய விலை கடை (எண் 5) புதிய கட்டிடம் கட்டி கடை அமைத்துக்கொடுக்க வேண்டும். அபிராமம் நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய பேரூராட்சி அலுவலக இடத்தில் திருமண மஹால் (காரியாபட்டி பேரூராட்சியில் இருப்பது போல்) அமைத்துக் கொடுக்க வேண்டும். அபிராமம் பேரூராட்சியின் வருவாயை பெருக்கிட அபிராமம் சந்தையை விரி வாக்கம் செய்து ஆடு கோழி விற்பனை சந்தை அமைத்திட வேண்டும். அபிராமத்தில் அபிராமம் எல்லை உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசின் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அபிராமம் கிளைச் செயலாளர் கே.வீரய்யா ,கே.முனியசாமி ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஜூலை 29 இல் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

இராமநாதபுரம், ஜூலை 24- இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை, இராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் சமை யல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் ஜூலை மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29.07.2026 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வரு வாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.