திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விரைவில் கைது?
yesterday
<p><strong>திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விரைவில் கைது?</strong></p><p>கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியை குறிவைத்து கடந்த சில வாரங்களாக மேற்கு வங்க மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளன. அதாவது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி வேலைகளுக்குப் பணம் வாங்கிய மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையும், சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளில் உள்ள முரண்பாடு கள், மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்ன தாக வன்முறையைத் தூண்டும் வகை யில் பேசியதாகக் கூறப்படும் குற்றச் சாட்டுகள் குறித்து மேற்கு வங்க சிஐடி யும் அபிஷேக் பானர்ஜியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அபிஷேக் பானர்ஜி யின் தனி உதவியாளரான சுமித் ராய்க்கு எதிராக புதிய எப்ஐஆர் பதிவு செய்துள் ளது மேற்கு வங்க பாஜக காவல்துறை. மேற்கு மிதன்பூர் மாவட்டத்தில் உள்ள டெப்ரா காவல் நிலையத்தில் பதிவு செய் யப்பட்டுள்ள இந்த புதிய வழக்கில், கடந்த மம்தா பானர்ஜி ஆட்சியின் போது மாநில அரசு வேலைகள் வாங்கித் தருவ தாகக் கூறி சுமித் ராய் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. ராய் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறு வதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீ ஸையும் வெளியிட்டுள்ளனர். அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பு இல்லாமல் இந்த ஊழல் அரங்கேற வாய்ப்பில்லை என்பதால், அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு வங்க பாஜக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p>
