முந்தய பக்கம்

அபிஷேக் பானர்ஜி வீடு மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்

yesterday
அபிஷேக் பானர்ஜி வீடு மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்
<p><strong>அபிஷேக் பானர்ஜி வீடு மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்</strong></p><p>கொல்கத்தா‘இந்தியா’ அணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. இவரது இல்லம் கொல்கத்தாவில் உள்ளது. </p><p>இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அபிஷேக் பானர்ஜி வீடு மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டர் எக்ஸ்பக்கத்தில்,”சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் எனது வீட்டின் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். வெள்ளிக்கிழமை காலை நன்கு உளவு பார்த்த பின்பே கொல்கத்தா காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடக்கும் போது அமைதியான பார்வையாளர்களாக இருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் நன்றி. வீடியோக்களை விரைவில் பதிவேற்றுவேன்” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram