சமூக விரோதிகளின் கூடாரமாகும் சுகாதார மையங்கள்
17 Jul 2026, 11:41 pm

சமூக விரோதிகளின் கூடாரமாகும் சுகாதார மையங்கள்

நாமக்கல், ஜூலை 17- பள்ளிபாளையம் சுற்றுவட் டாரப் பகுதிகளில், அரசு ஆரம்ப சுகா தார வளாக மையங்கள் போதிய பரா மரிப்பின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இல்லாததும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புற மக்களின் மருத்துவ தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழுத டைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அதை அரசு கண்டுகொள்ளாமல் இருப் பதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தி யுள்ளது.

பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட பல்வேறு இடங்களில் குறிப் பாக ஆவரங்காடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வந் தது. பின்பு அது அருகில் மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு அருகில் இன்னொரு புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப நகர் நல சுகாதார மையம் செயல்பட்டது.

பொதுமக்களின் மருத்துவ வசதி களை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பள்ளிபாளை யம் திருச்செங்கோடு சாலை ஜீவா செட் பகுதியில் விரிவடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது இந்த மூன்று சுகாதார மையங்களும் செயல்படாத நிலை யில் உள்ளது. இரண்டு பழைய அரசு சுகாதார மையங்களும் பழுதடை நிலை யிலும் செடி கொடிகள் நிறைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

கடந்த திங்களன்று கூட 55 வயது முதியவர் உள்ளே மூன்று நாட்களுக்கு முன்பாகவே இறந்துவிட்ட நிலையில், கடும் துர் நாற்றங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேபோல பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு பகுதியில் பல ஆண்டுகளாகவே மக்கள் பயன்பாட்டில் இல்லாத சுகாதாரம் மையத்தில் மது அருந்து வது, தகாத செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களை சமூக விரோதி கள் செய்து வருகின்றனர். இதேபோலவே அலமேடு பகுதி யிலும் பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட புதன் சந்தை பகுதி என திரும்பும் திசையெல்லாம் ஏனோ சில காரணங்களால் பயன்படுத்தப் படாத பழைய அரசு ஆரம்ப சுகா தார மையங்கள் இடிக்கப்படா மலும், வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள் ளது.

எனவே இந்த இடத்தில் போர்க் கால அடிப்படையில் புதிய அரசு சார்ந்த கட்டிடங்கள் அமைப்பதற் கும் அல்லது வேறு மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கும் இந்த கட் டிடங்களை முறையாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறையும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். - எம்.பிரபாகரன்