தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம்

20 Mar 2026, 2:55 pm
கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம்
<p><strong>கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம்&nbsp;விரைந்து நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு</strong></p> <p>தருமபுரி, மார்ச் 20- நாகமரையில் காவிரி ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக் கும் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். சேலம் மாவட்டம், மேட்டூர் &nbsp;அணையில் தேங்கி நிற்கும் தண் ணீரின் பின்புற எல்லை, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரை பகுதியில் உள்ளது. அணையில் தண்ணீர் நிரம்பி இருக் கும்போது, நாகமரை பகுதியில் காவிரி ஆறு பரந்து, விரிந்து கடல் போல காட்சியளிக்கும். இப்பகுதி மக்கள் மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நீண்ட தூர சுற்றுப் பயணத்தை தவிர்க்கும் வகையில், காவிரி ஆற்றை படகு அல்லது பரிசலில் கடந்து செல் கின்றனர். இதற்காக, நாகமரையி லும், மேட்டூர் அருகில் பண்ணவாடி பகுதியிலும் பரிசல் துறை அமைக் கப்பட்டுள்ளது. இவ்விரு பரிசல் துறைகளுக்கும் இடையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். நாகமரை - பண்ணவாடி மற் றும் கோட்டையூர் - ஒட்டனூர் என &nbsp;நாகமரை பகுதியிலேயே இரு இடங் களில் காவிரி ஆற்றைக் கடந்து செல்ல ஆண்டு முழுக்க படகு மற் றும் பரிசல்கள் இயக்கப்படுகின் றன. வேறு வழியின்றி இந்த பய ணத்தை சுற்றுவட்டாரப்பகுதி மக்க ளும், மாணவ, மாணவிகளும் பயன் படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த பயணம் மிகவும் ஆபத்தா னதாகவே உள்ளது. இதற்கு தீர்வு &nbsp;காணும் வகையிலும், இப்பகுதி யின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க &nbsp;வேண்டுமென பல ஆண்டுகளா கவே அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், நாக மரை பகுதியில் காவிரி ஆற்றை &nbsp;கடந்து செல்லும் வகையில், பாலம் அமைக்கும் போது நாகமரை ஒரு சுற்றுலா தலமாகவும் வளர்ச்சிபெ றும். ஒகேனக்கல் சுற்றுலாவை திட் டமிடும் வெளியூர் பயணிகள், நாக மரையையும், ஏரியூர் அருகிலுள்ள முத்தையன் கோவிலையும் பயணத் திட்டத்தில் இணைக்கும் சூழல் உரு வாகும். இச்சாலை வழியாக கணிச மான வாகனங்கள் பயணிக்க தொடங்கும்போது, தொப்பூர் கண வாய் பகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். இதனால் தொப்பூர் கணவாய் பகுதியில் நிக ழும் விபத்துகளும் குறைய வாய்ப்பு ஏற்படும். அப்பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று, கடந்த ஓராண்டிற்கு முன்பு ஓட்டனூர் &ndash;கோட்டையூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.250 கோடியில் உயர்மட்ட மேம் பாலம் மற்றும் இணைப்பு சாலை &nbsp;அமைக்கப்படும் என தமிழக முதல் வர் சட்டமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து கள ஆய்வு செய்யப் பட்டு, மண் பரிசோதனை செய்யப் பட்டது. பின்னர் இந்த திட்டத்திட் டம் நிறைவேற்ற எந்த பணிகளும் நடைபெறவில்லை. எனவே, இப் பகுதி மக்களின் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம் பாலம், அமைத்து இணைப்பு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.