ஆவின் பொருட்களின் விலை உயர்வு: நாளை முதல் அமல்!
2 hours before
<p>ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (அக். 28) முதல் அமலுக்கு வருகிறது.</p><p>இதன்படி, ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்த்தப்பட்டு ரூ.780 ஆகவும், 500 கிராம் வெண்ணெய் ரூ.45 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் தயிர் ஒரு கிலோ ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.130 ஆகவும், 500 கிராம் மைசூர்பாக் ரூ.40 உயர்த்தப்பட்டு ரூ.310 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>
