தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகை, கொடைக்கானலில் சோதனை முயற்சி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் விநியோகம்!

15 Jul 2026, 9:56 pm
உதகை, கொடைக்கானலில் சோதனை முயற்சி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் விநியோகம்!
<p><strong>உதகை, கொடைக்கானலில் சோதனை முயற்சி இயந்திரங்கள் மூலம் ஆவின் பால் விநியோகம்!</strong></p><p>சென்னை, ஜூலை 15 - உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப் பிரதேசங்களில் பிளாஸ் டிக் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக, தானி யங்கி பால் வழங்கும் இயந்திரங்களை (ஆட்டோமேட்டிக் வெண்டிங் மெஷின்) சோதனை முறையில் நிறுவவுள்ளதாக ஆவின் நிர்வாகம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைவாழிடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வரு கிறது. பிளாஸ்டிக் பால் பாக்கெட்டு களுக்கு மாற்று வழிகளை ஆராயுமாறு ஆவினுக்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் ஆகிய இடங்களில் முதற்கட்டமாக இந்த இயந்தி ரங்கள் நிறுவப்படும் என்றும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திட மிருந்து தலா ரூ. 3.60 லட்சம் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட வுள்ளதாகவும், இதற்கான அனுமதிகள் ஏற்கெனவே பெறப்பட்டுவிட்டதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பொதுமக்கள் வரவேற்பை ஆய்வு செய்த பின்னரே மற்ற இடங்களுக்கு இத்திட்டம் விரிவாக்கப்படும் என்றும் ஆவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.