ஆவின் பால் விநியோகம் திடீர் நிறுத்தம்
2 Apr 2026, 5:30 am
<p><strong>ஆவின் பால் விநியோகம் திடீர் நிறுத்தம்</strong></p><p>நாகர்கோவில், ஏப்.1- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆவின் பால் விநியோகம் திடீரென்று நிறுத்தப்பட்டது. பால் வராததால் வியாபாரம் இல்லாமல் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.</p><p>ஆவின் பால் வாடிக்கையாளர்கள் ஆவின் பால் கிடைக்காமல் சிரமம் அடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். உடனே பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
