தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்திடுக! பால்வளத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நேரில் வலியுறுத்தல்

12 Jun 2026, 9:27 pm
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்திடுக!  பால்வளத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நேரில் வலியுறுத்தல்

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்திடுக! பால்வளத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நேரில் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூன் 12- ஆவின் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து விரிவான மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சி.வெண்மணி சந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் பி.பெருமாள் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: கோரிக்கைகள்

விலை உயர்வு: கறவை மாடுகளுக்கான தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, பசும்பாலுக்கு 45 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கு 60 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊக்கத்தொகையையும் லிட்டருக்கு 10 ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

தரக் குறியீடு மாற்றம்: பாலின் தரத்தைக் கணக்கிட தற்போதுள்ள 8.2 கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள்(SNF) மற்றும் 4.3 கொழுப்புச் சத்து (F) என்ற சாத்தியமற்ற முறையை மாற்றி, 8.0 SNF மற்றும் 4.0 F என நிர்ணயம் செய்ய வேண்டும். கொள்முதலின் போது உற்பத்தியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் MRF முறையைக் கைவிட்டு, இதர மாநிலங்களைப் போல ISI பார்முலாவையே பயன்படுத்த வேண்டும். பால் திருட்டைத் தடுக்க கொள்முதல் செய்யும் இடத்திலேயே தரத்தையும் அளவையும் கணக்கிட வேண்டும்.

தீவனம் மற்றும் மருத்துவ உதவி: ஆவின் தீவன ஆலைகளை முழுமையாக இயக்கி, உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போடுவதோடு, அவசரக் காலங்களில் கட்டணமின்றி உரிய நேரத்தில் கால்நடை சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிஞர் அண்ணா இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் விபத்து மரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்குப் பணிப்பாதுகாப்புடன் கூடிய சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஆவினில் தினசரி கொள்முதலை 1 கோடி லிட்டராக உயர்த்தக் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, குழந்தைகளின் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரைச் சந்தித்த இந்த நிகழ்வில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் ஏ.எம்.முனுசாமி, எம்.சிவாஜி, பி.இராமநாதன், கே.அன்பு, மாநிலத் துணைச் செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன், என்.ஜோதி, அண்ணாமலை, கமலக்கண்ணன், சேலம் மாவட்டச் செயலாளர் பி.அரியாக் கவுண்டர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.