முந்தய பக்கம்

பால் உபபொருட்களின் விலை இன்று முதல் உயர்வு!

27 Oct 2026, 9:50 pm
பால் உபபொருட்களின் விலை இன்று முதல் உயர்வு!

பால் உபபொருட்களின் விலை இன்று முதல் உயர்வு!

சென்னை, அக்.27 -ஆவின் நிறுவனம் நெய், தயிர், இனிப்புகள் உள்ளிட்ட 67 பால் உபபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. புதிய விலை புதன்கிழமை (அக்.28) முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் தற்போது 230-க்கும் மேற்பட்ட உபபொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

புதிய விலை விவரம்

ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.780 ஆகிறது. 500 மி.லி. நெய் ரூ.365-லிருந்து ரூ.400-க்கும், 200 மி.லி. நெய் ரூ.160-லிருந்து ரூ.180-க்கும் விற்கப்படும். மில்க் ஷேக் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும், 500 மி.லி. தயிர் ரூ.35-லிருந்து ரூ.40 ஆகவும், 250 கிராம் மைசூர்பா ரூ.140-லிருந்து ரூ.160 ஆகவும் உயர்கின்றன. பிற இனிப்புவகைகளின் விலைகளும் மாற்றப்பட்டுள்ளன.ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆவின் விளக்கம்

இந்நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாலும், தனியார் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு நிறுவனங்களின் ஒத்த பொருட்களின் விலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஆவின் விளக்கம் அளித்துள்ளது.மேலும், இந்த உயர்வுக்குப் பிறகும் ஆவின் பொருட்களின் விலை பிற நிறுவனங்களை விடக் குறைவாகவே இருக்கும் என்றும், இது லாப நோக்கமற்ற நடவடிக்கை என்றும் அது கூறியுள்ளது.கூடுதல் வருவாயில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் எனவும், இதன் மூலம் கூட்டுறவுப் பால் கொள்முதல் கட்டமைப்பு வலுப்பெறும் எனவும் ஆவின் குறிப்பிட்டுஉள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram