ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம்: அரசு விளக்கம்
13 Jun 2026, 11:00 pm
<p><strong>ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம்: அரசு விளக்கம்</strong> </p><p>சென்னை, ஜூன் 13- ஆவின் நிறுவனத்தின் பச்சை நிறப் பால் பாக்கெட் (கிரீன் மேஜிக்) விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், உற் பத்தி கணிசமாகக் குறைக் கப்பட்டதாகவும் சில ஊட கங்களிலும் சமூக வலை தளங்களிலும் பரவிய செய்தி களை தமிழக அரசும் ஆவின் நிர்வாகமும் முற்றிலும் மறுத் துள்ளன. ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “கிரீன் மேஜிக் பால் உட்பட அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் எந்தத் தடையுமின்றி வழக்கமான அளவில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுகர் வோரிடமிருந்தோ பொதுமக்களிடமிருந்தோ நிறுவனத்திற்கு எந்தவொரு புகாரும் வரவில்லை என் றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.</p>
