தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூரில் ஆவின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

9 Mar 2026, 4:24 pm
திருவில்லிபுத்தூரில் ஆவின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவில்லிபுத்தூரில் ஆவின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவில்லிபுத்தூர், மார்ச் 9- விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவல கம் முன்பு, சிஐடியு ஆவின் கூட்டுறவு சங்கத் &nbsp;தின் சார்பில் ஆவின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி பஞ்சப்படி வழங்க வேண்டும். குடும்ப &nbsp;ஓய்வூதியம் உடனடியாக கிடைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறப்பிற்கு &nbsp;பிறகு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50,000 காலதாமதமின்றி வழங்கப் பட வேண்டும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் &nbsp;பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படா மல் உள்ள வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண்டர் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சீருடை வழங்க &nbsp;வேண்டும். பிடிக்கப்படுகின்ற குரூப் இன்சூ ரன்ஸ் திட்டத்துக்குரிய ஆவணங்கள் ஊழி யர்களுக்கு வழங்கி மருத்துவ வசதிகளை பெறத் தொடங்க செய்ய வேண்டும் என்பன &nbsp;உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவின் சிஐடியு செயலாளர் ராமர் &nbsp;தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உத வித் தலைவர் திருமலை துவக்கி வைத்தார். &nbsp;கூட்டுறவு சிஐடியு சங்க மாவட்டத் தலை வர் ராமசாமி, முன்னாள் செயலாளர் மாரி முத்து, மாவட்ட உதவி தலைவர்கள் மற்றும் &nbsp;சந்தனம் பிச்சைக்கனி, மாவட்டக் குழு உறுப்பினர் வீரசதானந்தம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர். கூட்டுறவு சிஐடியு மாவட்டச் செயலா ளர் முனியாண்டி நிறைவு செய்து பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் சின்னமுத்து, உதவி தலைவர் கருப்பசாமி, உதவிச் செய லாளர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் பலர் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.