முந்தய பக்கம்

ஆவின் கூட்டுறவு சங்கக் கட்டடம் திறப்பு

22 Jun 2026, 12:32 am
ஆவின் கூட்டுறவு சங்கக் கட்டடம் திறப்பு
<p><strong>ஆவின் கூட்டுறவு சங்கக் கட்டடம் திறப்பு</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டியில், மக்கள வைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவர் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடங்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட் டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, ஒன்றியச் செயலாளர் முரு கேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகேசன், சுப்பிரமணி, ஆறுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய கட்டடம் திறக்கப் பட்டதன் மூலம் பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் மேலும் மேம்படும் என தெரி விக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram