நடிகர் அமீர் கானைக் கொல்பவர்களுக்கு ரூ. 5 கோடியாம்! அயோத்தி போலிச் சாமியார் மிரட்டல்
17 Jul 2026, 8:15 pm
<p><strong>நடிகர் அமீர் கானைக் கொல்பவர்களுக்கு ரூ. 5 கோடியாம்! அயோத்தி போலிச் சாமியார் மிரட்டல்</strong></p><p>பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும், கவுரி ஸ்ப்ராட்டும் ஜூலை 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அமீர் கான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் மற்றும் ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்த கவுரி ஸ்ப்ராட், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர் என்று கூறப்படுகிறது. அமீர்கானுக்கு இது மூன்றாவது திருமணமாகும்; அவர் ஏற்கெனவே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரைத் திருமணம் செய்தி ருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த போலிச் சாமியாரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா, “நடிகர் அமீர்கானைக் கொல்பவர்களுக்கு ரூ. 5 கோடி வழங்கப்படும்” என மிரட்டல் விடுத்துள் ளார். மூன்று முறை திருமணம் செய்து கொண்டுள்ள அமீர்கான், தனது திருமணங்கள் மூலம் திட்டமிட்டே இந்து பெண்களைக் குறிவைப்பதாகவும், இதன் மூலம் “லவ் ஜிஹாத்” என்ற செய லை ஊக்குவிப்பதாகவும் பரமஹன்ஸ் ஆச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே முன்வைத்த குற்றச்சாட்டுகளை அயோத்தி போலிச் சாமியார் வழிமொழிந்துள்ளார். சாமியா ரின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து நடி கர் அமீர்கானுக்குப் பாதுகாப்பு அதி கரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கள் வலுத்துள்ளன. முன்னதாக, கடந்த வாரம், பீகாரின் போர்பெஸ்கஞ்ச் பகுதியில் பஜ்ரங் தளம் குண்டர்கள் அமீர் கானின் உருவ பொம்மையை எரித்து, அவர் மீது லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுகளைக் கூறிப் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
