ஆகிருதி: ஆணாதிக்கச் சுவர்களை உடைக்கும் பெண்களின் கலகக் குரல் - சு.பொ.அகத்தியலிங்கம்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>ஆகிருதி: ஆணாதிக்கச் சுவர்களை உடைக்கும் பெண்களின் கலகக் குரல்</strong></p>
<p>“செத்துப் போய்க் கிடந்தாக் கூட சோத்தாக்கி வெச்சிட்டுப் பாடையில போய் படுன்னு சொல்வானுக...” - பெண் இச்சமூகத்தில் சந்திக்கும் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக எவரும் சொல்லிவிட முடி யாது. எழுத்தாளர் சரிதா ஜோ அவர்களின் ‘ஆகிருதி’ சிறுகதைத் தொகுப்பு, இத்தகைய எதார்த்தமான வலியையும், அதிலிருந்து கிளர்ந்தெழும் பெண்களின் துணிச்சலையும் பேசுகிறது. பெண் உளவியலும் சமூகச் சித்திரமும் தொகுப்பின் முதல் கதையான ‘ஆகிருதி’, கறுப்பாய் பிறந்ததையே குற்ற மாகப் பார்க்கும் சமூகப் பார்வையைத் தோலுரிக்கிறது. நாயகி மகாவின் சோகமும், அதே சமயம் தனக்கென ஒரு புதிய தடத்தை அமைத்துக்கொள்ளும் அவளது துணிச்சலும் கதையை வலுவாக நிறுத்துகின்றன. ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் உறைந்து கிடப்ப தையும், அதே வேளை மனைவி யின் பக்கம் நிற்கும் கனிவான ஆண்களையும் ஆசிரியர் அடையாளப் படுத்துகிறார். வாசிக்கப்பட வேண்டிய அத்தியாயங்கள் ‘வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்’ கதையில் வரும் ‘சிலுக்கு’ என்ற கதாபாத்திரம் ஒரு குறியீடாகவே மிளிர் கிறது. சினிமாவில் எதிர்மறைப் பாத்திர மாகச் சித்தரிக்கப்பட்டாலும், பல பெண்களுக்குப் பிடித்தமான ‘நீலாம்பரி’ போன்ற கதாபாத்திரங்களின் பின்னால் இருக்கும் பெண் உளவியலைச் சரிதா ஜோ மிகச் சரியாக உள்வாங்கியிருக் கிறார். ஒடுக்கப்பட்ட பெண்களின் மனக் குமுறல்களுக்குத் தார்மீக வலு சேர்க்கின்றன இக்கதைகள். சாதிய நஞ்சும் ஆளுமையும் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டது போல, சாதி நம் வாழ்வில் எத்தகைய விஷ மாகப் பிணைந்திருக்கிறது என்பதை ‘கழுவாய்’, ‘தாபந்தம்’ போன்ற கதைகள் வாசிப்பவர் மனதைத் தைக்கும்படிச் சொல்கின்றன. ‘வீடிலிகள்’ கதை சாதி ஆணவத்தையும் ஆணாதிக்கத்தையும் ஒருங்கே படம் பிடிக்கும் உயிர்ச் சித்திர மாகத் திகழ்கிறது. வட்டார மொழி ஆளு மையும், கதை சொல்லும் பாங்கும் சரிதா ஜோவுக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் சொல்வது போல, ஒரு புதிய கலகக் குரலாக இத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று சமரசமின்றிப் பேசும் இச்சிறுகதைகள், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான வரவு. ஆகிருதி (சிறுகதைகள் தொகுப்பு) ஆசிரியர்: சரிதா ஜோ வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 176 | விலை: ₹220</p>
<p> </p>
