எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா படைப்புலக ஆய்வு, நூல் வெளியீட்டு விழா!
17 Jun 2026, 8:54 pm

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா படைப்புலக ஆய்வு, நூல் வெளியீட்டு விழா!

கோயம்புத்தூர், ஜூன் 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கோவை அணங்கு கிளை சார்பில், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புலகத்தை மையமாகக் கொண்ட முழு நாள் சிறப்பு அமர்வு மற்றும் நூல் வெளியீட்டு விழா பீளமேடு இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமுஎகச மாவட்டப் பொருளாளரும் கிளைத் தலைவரு மான முனைவர் வெ.மைதிலி தலைமை தாங்கினார். கவிஞர் ச.ப்ரியா வரவேற்றார்.

முதல் அமர்வில், “ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்” தொகுப்பின் முதல் பாகத்தை லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன் வெளியிட, கல்லூரித் தாளாளர் சரஸ்வதி கண்ணை யன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இரண்டாம் பாகத்தைத் தி ஐ பவுண்டேஷன் முதன்மை இயக்க அலுவலர் அர்ஜூன் அண்ணாமலை வெளியிட, வனிதா, சதீஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். படைப்புகள் குறித்த ஆய்வுரை இரண்டாவது அமர்வில் மாவட்டச் செயலாளர் அ.கரீம் நோக்க உரையாற்றி னார். எழுத்தாளர் மணிமாறன் நாவல்கள் குறித்தும், கவிஞர் சுடர்விழி கவிதைகள் குறித்தும், ஓடை துரையரசன் மற்றும் கவிஞர் வேல்கண்ணன் சிறுகதைகள் குறித்தும் கருத்துரை வழங்கினர். ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரைகள் குறித்து தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, “கதையின் தலைப்பு கடைசி யில் இருக்கக்கூடும்” என்ற சிறுகதையைத் தழுவி, அரும்புகள் நாடகக் குழுவினரின் “தொரட்டி” நவீன நாடகம் நடைபெற்றது. தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் ஷோபா சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஏற்புரையாற்றினார். இலக்கிய ஆர்வலர்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்வின் இறுதியில் இ.இஷானா நன்றி கூறினார்.