தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரியார், அண்ணா, அம்பேத்கரின் கொள்கைப்படியே தவெக அரசு செயல்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி

23 May 2026, 12:55 am
பெரியார், அண்ணா, அம்பேத்கரின்  கொள்கைப்படியே தவெக அரசு  செயல்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி

பெரியார், அண்ணா, அம்பேத்கரின் கொள்கைப்படியே தவெக அரசு செயல்படும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேட்டி

சென்னை, மே 22- தவெக அரசு பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்கரின் கொள்கைப்படியே செயல் படும் என்றும் இது மதச்சார்பற்ற அரசு என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதிபடக் கூறி யுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளியன்று (மே 22) அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியுள் ளார் என்றும், மக்கள் சாதி, மதங்களை எல்லாம் கடந்து வாக்களித்துள்ளனர்.

இந்த அரசு பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்க ரின் கொள்கைப்படியே செயல்படும்.

“எங்களுக்குப் பெரும்பான்மை இல்லாத நேரத்தில், அதிமுகவிடம் ஆதரவு கேட்டி ருந்தால் அது எளிதாகக் கிடைத்திருக்கும்.

ஆனால், இந்த அரசு மதச்சார்பற்றது என்ற நம்பிக்கையை காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளிடம் உருவாக்கி ஆட்சியை அமைத்தோம். கடந்த 60 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் கட்சியி டம் அமைச்சரவையில் இடம்பெறுவதன் அவ சியத்தை எடுத்துரைத்துச் சேர்த்துள்ளோம்.

இந்த அமைச்சரவை பங்கீட்டை காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடி வருகின்றனர்” மேலும், “கூட்டணி என்பது தேர்தலுக் கானது மட்டுமே. தேர்தலுக்குப் பின் கூட்ட ணியை முடிவு செய்யும் உரிமை அந்தந்தக் கட்சிகளுக்கு உள்ளது.

எந்தக் கட்சி யும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, விசிக மற்றும் அதன் தலைவர் திருமாவளவனை நோக்கிச் சொல்லத்தகாத வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒருகட்சியையோ, ஒரு தலைவரையோ பெண்ணின் உறவுடன் தொடர்புபடுத்திப் பேசு வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” . ஜனநாயகப் பண்பின் அடிப்படை யில்தான் முதலமைச்சர் விஜய், எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்றும், ஆனால் அந்தப் பண்பு 75 ஆண்டு காலக் கட்சியான திமுகவுக்கு இல்லை.

சர்ச்சைக் குரிய வகையில் பதிவிட்ட ஆ.ராசா, தமிழக மக்களிடமும் விசிக தலைவர் திருமாவள வனிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களுக்காகப் பேசும் கனிமொழி இந்த விவகாரத்தில் ஆ.ராசா வின் கருத்தைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து தனது துறை சார்ந்த பணிகள் குறித்துப் பேசிய அமைச்சர், “முன்பு பொதுப் பணித்துறையில் ஆற்றில் தூர்வாராமலேயே தூர்வாரியதாகப் போலி ரசீதுகள் போடும் நிலை இருந்தது.

இனிமேல் உண்மையான பணிகள் மட்டுமே நடக்கும். போலி பில்கள், போலி ஒப்பந்ததாரர்கள் மற்றும் பினாமி நிறுவனங்கள் இனி இருக்காது. இது குறித்து ஆய்வு செய்து, முறைகேடான டெண்டர்களை நிறுத்தி வைத்துள்ளோம்.

கடந்த தேர்தலுக்கு முந்தைய ஒரு மாதத்தில், பழைய அரசு மீண்டும் வந்து விடும் என்ற நம்பிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான டெண்டர் களைப் போட்டு முன்பணம் வாங்கி யுள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையிலும் இதே போன்ற பிரச்சனைகள் உள்ளன. இவ்வாறு ஆதர் அர்ஜூனா கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.