முந்தய பக்கம்

முதல்வர் அலுவலக மாற்றம் அதிகாரிகளின் வசதிக்காகவே! ஆதவ் அர்ஜுனா விளக்கம்

18 Aug 2026, 9:41 pm
முதல்வர் அலுவலக மாற்றம் அதிகாரிகளின் வசதிக்காகவே! ஆதவ் அர்ஜுனா விளக்கம்

முதல்வர் அலுவலக மாற்றம் அதிகாரிகளின் வசதிக்காகவே!

ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை, ஆக.18 – மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் எ.வ.வேலு, தலைமைச் செயலகத்தில் ரூ.5.54 கோடியில்மேற்கொள்ளப்படும் முதல்வர் அலுவலக மாற்றத்தின் டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லைஎன்று செய்தி வெளியானதாகக் கேள்வி எழுப்பினார். காலை உணவுத் திட்டத்துக்குக் காமராஜர் பெயர் மாற்றியது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, டெண்டர் நடைமுறை இன்னும் முடிவடையாத நிலையில் வெளியான செய்திகள் தவறானவை என மறுத்தார். முதல்வரைச் சுற்றி 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 100 சதுர அடிக்கும் குறைவான இடத்தில், உரிய கழிப்பறை வசதியின்றிப் பணியாற்றும் சூழல் இருப்பதாகவும், சுமார் 200 பேர் வசதியாகப் பணியாற்றும் வகையில் மறுசீரமைப்பே நோக்கம் எனவும் அவர்விளக்கினார்.

கடந்த 60 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மறு-டெண்டர் விடப்பட்டு, 20% முதல் 36% வரை குறைந்த மதிப்பில் டெண்டர்கள் பெறப்பட்டதாகவும், நெடுஞ்சாலை–பொதுப்பணித் துறை டெண்டர்கள் குறித்து விரைவில்வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram